ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான பாதிப்புகள் மிகவும் குறைந்துள்ள நிலையில் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் அமீரகத்தில் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த ஒரு நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவு குறைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு நாளில் மட்டும் அமீரகத்தில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக 150 க்கும் கீழே தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் முதன் முறையாக மிக குறைவான பாதிப்புகள் பதிவாகி உள்ளது.
மேலும் கடந்த ஒரு நாளில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் 215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரையிலும் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,044,704 ஆகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,024,595 ஆகவும் உயர்ந்துள்ளது. அத்துடன் இதுவரை 2,348 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.