ADVERTISEMENT

UAE: குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் 90 நாட்கள் விசாவை வழங்கும் அமீரகம்.. நிபந்தனைகள் என்ன..??

Published: 22 Jan 2023, 10:22 AM |
Updated: 22 Jan 2023, 11:25 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே அமலில் இருந்த விசா நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய விசா நடைமுறைகளை அமீரக அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. அவற்றில் ஒன்றாக 90 நாட்கள் விசிட் விசா ரத்து செய்யப்பட்டு 30 நாட்கள் மற்றும் 60 நாட்கள் விசிட் விசா தற்பொழுது அமீரகத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT

இந்த நிலையில் குறிப்பிட்ட பிரிவினருக்கு 90 நாட்கள் விசிட் விசா வழங்கப்படுவதாக டிராவல் ஏஜென்ட்கள் தற்பொழுது உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இது குறித்து கூறுகையில், “அமீரகத்தில் தற்போது, ​​நாடு முழுவதும், 30 மற்றும் 60 நாட்களுக்கான விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இருந்தபோதிலும் குறிப்பிட்ட சூழ்நிலையில் 90 நாட்கள் தங்குவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படுகிறது” என்று பயண முகவர்கள் கூறியுள்ளனர்.

சில நிபந்தனைகளின் கீழ் இந்த 90 நாள் விசாக்கள் வழங்கப்படலாம் என்று தெரிவித்த அவர்கள் இந்த விசா யாருக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதில் ஒன்று மருத்துவ சுற்றுலா விசா ஆகும். இதன்படி எந்தவொரு மருத்துவ தேவைகளுக்காகவும் நாட்டிற்கு வருபவர்கள் மருத்துவ அறிக்கைகள், மருத்துவரின் அப்பாய்மெண்ட் மற்றும் பிற ஆதாரங்களை வழங்கினால், 90 நாள் விசாவைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போல் அமீரகத்தில் வேலை தேடி வருபவர்களுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய விசாவான Job Exploration Visa என்பது மற்றொரு விசாவாகும். மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின் (MoHRE) படி முதல், இரண்டாவது அல்லது மூன்றாம் திறன் நிலைகளில் வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு அல்லது உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் இருந்து படித்த புதிய பட்டதாரிகளுக்கு இந்த விசா வழங்கப்படும்.

இந்த விசாக்களும் 60, 90 மற்றும் 120 நாட்கள் என மூன்று காலகட்டங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இருக்கும் IIT பல்கலக்கழகம் அமீரகத்தால் பட்டியலிடப்பட்டுள்ள உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாவிற்கான கட்டணம் தங்கியிருக்கும் காலத்தின் அடிப்படையில் மாறுபடும். 

ADVERTISEMENT

அமீரகத்தில் தற்பொழுது இரண்டு மாத விசிட் விசாக்கள் 400 திர்ஹம்ஸ் மற்றும் 450 திர்ஹம்ஸ் வரையிலான கட்டணங்களில் கிடைக்கின்றன. மேலும் விசாவை நீட்டித்துக்கொள்ள 900 திர்ஹம் அல்லது அதற்கு மேற்பட்ட செலவில் விசிட்டர்கள் தங்கள் விசாக்களை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கவும் முடியும். இருப்பினும், விசாவை நீட்டிக்க அவர்கள் விமானம் அல்லது தரை வழியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.