அமீரக செய்திகள்

அமீரக குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை: இது போன்ற போலி செய்திகளை நம்ப வேண்டாம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் முக்கிய கூரியர் நிறுவனங்களில் இருந்து வரும் போலி செய்திகள் குறித்து குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அமீரகத்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையம் (TDRA) சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு பதிவில், குடியிருப்பாளர்களுக்கு தங்களின் மொபைல் எண்ணிற்கு ஒரு SMS வருவதாகவும் அதில் பயனர்களை டெலிவரி கட்டணங்கள் செலுத்த அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுமாறும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இது ஒரு பொய்யான தகவல் என்றும் இது போன்ற மோசடி செயல்களில் இருந்து குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் ஆணையம் எச்சரித்துள்ளது.

அத்துடன் இது போன்ற லிங்குகளை கிளிக் செய்யவோ அல்லது தொடர்பு கொள்ளவோ ​​வேண்டாம் என்றும், எந்தவொரு சேவைகளுக்கும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் ஆணையம் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.

மேலும் TDRA படி, இந்த போலி செய்திகளை அனுப்பும் மூலத்தை கண்டறிந்து நிறுத்தவும், அத்தகைய இணைப்புகள் அனைத்தையும் தடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!