அமீரக செய்திகள்

அமீரகத்தில் 160 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை அறிவித்த எமிரேட்ஸ் டிரா..

அமீரகத்தில் நடைபெற்று வரும் வாராந்திர ராஃபிள் டிராவான எமிரேட்ஸ் டிராவின் 2023ஆம் ஆண்டிற்கான ‘Games For All’-ன் முதல் பாகத்தில் அதிகளவு பரிசுகள் வழங்கப்பட்டு மிகப்பெரிய அளவில் டிராக்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டின் முதல் வாராந்திர விளையாட்டுகளில் மட்டுமே வெற்றிபெற்ற 12,703 நபர்களுக்கு 761,066 திர்ஹம்ஸ் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த எமிரேட்ஸ் டிரா MEGA7 இன் முந்தைய டிராவில் 7,258 வெற்றியாளர்கள், 480,983 திர்ஹம்ஸ் பரிசுகளை வென்றதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் வார இறுதியில் நடக்கவிருக்கும் Emirates Draw MEGA 7 ராஃபிள் டிராவானது மெகா பரிசாக 160 மில்லியன் திர்ஹம்ஸை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிராவானது வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 15, 2023 அன்று இரவு 9 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதே போல வெள்ளிக்கிழமை நடைபெற்ற 15வது எமிரேட்ஸ் டிரா EASY6 எபிசோடில் 5,445 வெற்றியாளர்கள் 280,083 ரொக்கப் பரிசுகளை வென்றனர் என்றும், இதில் ஆறு வெற்றியாளர்கள் தலா 15,000 திர்ஹம்ஸை வென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EASY6-ன் அடுத்த டிராவானது வருகின்ற வெள்ளிக்கிழமை ஜனவரி 13, 2023 அன்று நேரடி ஒளிபரப்பில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் டிராவின் சமூக வலைத்தளங்களான யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் எமிரேட்ஸ் டிரா வலைதளத்தில் இந்த டிராக்களை நேரடியாக மக்கள் காணலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!