ADVERTISEMENT

அமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல், டீசல் விலை அறிவிப்பு.. தொடர்ந்து மூன்று மாத உயர்வுக்குப் பின் குறைந்த விலை!!

Published: 31 Oct 2026, 11:25 AM |
Updated: 31 Oct 2026, 11:25 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக எரிபொருள் விலைகள் உயர்ந்து வந்த நிலையில், தற்போது எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

ADVERTISEMENT

சனிக்கிழமை, அக்டோபர் 31 அன்று அறிவிக்கப்பட்ட இந்த புதிய விலைகள், குடும்ப பட்ஜெட் திட்டத்தில் எரிபொருள் செலவு ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், மக்களுக்குச் சற்று நிம்மதியை அளிக்கும்.

நவம்பர் 2026-க்கான எரிபொருள் விலைகள்

நவம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய விலைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT
  • சூப்பர் 98 (Super 98): 4.16 திர்ஹம் (அக்டோபரில் 4.40 திர்ஹமாக இருந்தது).
  • ஸ்பெஷல் 95 (Special 95): 4.04 திர்ஹம் (முன்பு 4.28 திர்ஹமாக இருந்தது).
  • இ-பிளஸ் 91 (E-Plus 91): 3.97 திர்ஹம் (முன்பு 4.21 திர்ஹமாக இருந்தது).
  • டீசல் (Diesel): 4.75 திர்ஹம் (முன்பு 4.80 திர்ஹமாக இருந்தது).

பிராந்தியப் போர்ச் சூழலுக்கு மத்தியில், தொடர்ந்து நான்கு மாதங்கள் விலை உயர்ந்த பிறகு, கடந்த ஜூலை மாதத்தில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன.

அதன்பின், ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் விலை உயரத் தொடங்கி, அடுத்த மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து அதிகரித்தது. தற்போது நவம்பர் மாதத்தில் மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிப்ரவரி 28 அன்று மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து, அமீரகத்தில் சில்லறை எரிபொருள் விலைகள் 60 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன. இடையில் ஜூலை மாதம் ஒருமுறை விலை குறைந்தாலும், ஆகஸ்ட் முதல் மீண்டும் விலை அதிகரித்து வந்தது.

இந்த விலை குறைப்பு குடியிருப்பாளர்களுக்கு என்ன பயன்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல குடியிருப்பாளர்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் செலவுகள் அன்றாட அல்லது தொடர்ச்சியான செலவுகளாக இருப்பதால், எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்கள் நேரடியாக அவர்களின் குடும்ப பட்ஜெட் திட்டத்தைப் பாதிக்கின்றன.

இந்த விலை குறைப்பால், நவம்பர் மாதம் முதல் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்குச் செலவிடும் தொகை குறையும். இருப்பினும், இந்தச் சேமிப்பு என்பது அந்தந்த வாகனங்களின் எரிபொருள் கொள்ளளவு மற்றும் பயன்பாட்டின் அளவைப் பொறுத்தே அமையும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel