ADVERTISEMENT

காணும் தூரம் எங்கும் பசுமை.. அறுவடைக்கு தயாராகும் கோதுமை பயிர்கள்.. விவசாயத்தில் சாதித்த அமீரகம்..!!

Published: 8 Jan 2023, 6:26 PM |
Updated: 8 Jan 2023, 8:40 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப காலமாகவே அவ்வப்போது மழை பெய்தும் குளிர்ந்த வானிலையும் நிலவி வருவதால் அமீரகம் முழுவதுமே கடந்த சில நாட்களாகவே பசுமையாக காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில் ஷார்ஜா ஆட்சியாளர் ஷார்ஜாவில் ஒரு மாதத்திற்கு முன் விதைத்த கோதுமை விதைகளானது பாலைவனத்தை பசுமையான சோலைவனமாக மாற்றியுள்ளது.

ADVERTISEMENT

சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள் நவம்பர் 30, 2022 அன்று 400 ஹெக்டேர்களை உள்ளடக்கிய திட்டத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கி கோதுமை பயிர்களை பயிரிட்டார். தற்பொழுது அந்த பயிரானது வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கும் வீடியோவானது சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது.

அதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), ஷார்ஜா அரசாங்க அலுவலகமானது, ஷார்ஜா ஆட்சியாளர் Mleiha இல் உள்ள கோதுமை பண்ணைக்கு வருகை தரும் வீடியோவை வெளியிட்டது. 

ADVERTISEMENT

இந்த பயிர்களானது இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 2024 ஆம் ஆண்டுக்குள் 880 ஹெக்டேர் பரப்பளவில் இந்த பண்ணை விரிவுபடுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

13 மீட்டர் நீளமுள்ள நீர்ப்பாசன எந்திரங்கள் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஷேக் சுல்தான் இந்த பயணத்தின் போது, ​​அதிநவீன நீர்ப்பாசன நிலையத்தையும் பார்வையிட்டார். இது நாள் முழுவதும் 60,000 கன மீட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட ஆறு பெரிய உறிஞ்சும் பம்புகள் மூலம் கோதுமை பண்ணைக்கு தண்ணீர் வழங்குகிறது. அத்துடன் ஹம்தா நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் கன்வேயர் லைன் மூலம் பண்ணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.