ADVERTISEMENT

துபாய்: இரண்டு நாட்களுக்கு போக்குவரத்தில் பாதிப்படையும் சாலைகள்.. RTA வெளியிட்ட அறிவிப்பு..!!

Published: 27 Jan 2023, 5:13 PM |
Updated: 27 Jan 2023, 5:24 PM |
Posted By: admin

துபாயில் உள்ள கொக்ககோலா அரங்கில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளால் சில சாலைகளில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் (ஜனவரி 27 மற்றும் 28) கொக்ககோலா அரங்கில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளின் காரணமாக குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்தில் சிரமங்கள் ஏற்படலாம் என்று ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த இரண்டு நாட்களும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை (நள்ளிரவு) பாதிக்கப்படும் சாலைகளின் விபரங்களையும் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்படும் சாலைகள்:

அல் சஃபா ஸ்ட்ரீட்

ADVERTISEMENT

அல் பதா ஸ்ட்ரீட்

ஃபைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட்டின் இன்டர்செக்‌ஷனில் உள்ள ஷேக் சயீத் ரோடு.

ADVERTISEMENT

இந்த நேரங்களில் போக்குவரத்தில் கால தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, துபாய் மெட்ரோவைப் பயன்படுத்துமாறு குடியிருப்பாளர்களை ஆணையம் வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.