அமீரக செய்திகள்

துபாய்: சிறிய மற்றும் தெரியாத நபர் ஏற்படுத்தும் சாலை விபத்துக்களுக்கு எதிராக இனி பெட்ரோல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்..!!

துபாய் வாகன ஓட்டிகள் இப்போது சிறிய சாலை விபத்துக்கள் மற்றும் தெரியாத நபர் ஏற்படுத்தும் சாலை விபத்துக்களுக்கு எதிராக Enoc சேவை நிலையங்களில் புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் காவல்துறை, “On The Go” எனும் முயற்சியின் 4-வது கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய சேவையை தொடங்கியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இது வாகன ஓட்டிகள் சிறிய விபத்துகளை மற்றும் தெரியாத நபர் ஏற்படுத்தும் விபத்துகளை இந்த முயற்சியில் பங்கேற்கும் Enoc சேவை நிலையங்களில் புகாரளிக்க அனுமதிக்கிறது.

இதன்படி Enoc சேவை நிலையங்களில் உள்ள பணியாளர்கள், வாகன ஓட்டிகள் காவல் நிலையத்திற்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கு பதிலாக சில நிமிடங்களிலேயே சிறிய விபத்துகளைப் புகாரளிப்பதற்கும், தெரியாத நபர் ஏற்படுத்திய விபத்துகளுக்கு எதிராகவும் குடியிருப்பாளர்களுக்கு உதவுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ‘On-The-Go’ முன்முயற்சியின் தலைவர் லெப்டினன்ட் மஜித் அல் காபி கூறுகையில், “இது போக்குவரத்து ஓட்டத்தை பராமரிப்பதில் காவல்துறை ரோந்துக்கு உதவுகிறது. அத்துடன் துபாய் காவல்துறையின் கூட்டாண்மை மற்றும் தனியார் துறைகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.” என கூறியுள்ளார்.

மேலும், “இந்த முயற்சி சமூகத்தின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு பதிலளிக்கிறது. இந்த சேவையை தொடங்குவதன் மூலம் Enoc உடனான தங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்துவது, துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் செயலியை நிறைவு செய்கிறது, இதன் மூலம் வாகன ஓட்டிகள் சிறிய விபத்துக்கள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்திய தெரியாத நபருக்கு எதிராக புகாரளிக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!