ADVERTISEMENT

UAE, சவூதி, ஓமான் உள்ளிட்ட 10 நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் UPI மூலம் டிரான்ஸாக்‌ஷன் செய்யும் வசதி…!!

Published: 21 Jan 2023, 6:51 PM |
Updated: 21 Jan 2023, 7:00 PM |
Posted By: admin

Non Resident Indian என்று சொல்லக்கூடிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் NRE/NRO போன்ற சர்வதேச மொபைல் எண்களைக் கொண்டு திறக்கப்பட்ட உள்நாட்டு வங்கிக் கணக்குகளை வைத்திருப்பர். அதில் NRE அக்கவுண்ட் வெளிநாட்டில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு பணம் அனுப்புவதற்கும் NRO அக்கவுண்ட் அவர்கள் உள்நாட்டில் வரும் வருமானத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது. 

ADVERTISEMENT

சமீப காலமாக இந்தியாவில் பண பரிவர்த்தனை செய்வதற்காக UPI எனும் டிஜிட்டல் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. NRI களால் இந்த UPI நெட்வொர்க்கை தற்பொழுது வரை பயன்படுத்த முடியாது. ஏனெனில் இந்த அம்சமானது இதுவரை இந்திய சிம் கார்டு ஃபோன்களில் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் விரைவிலேயே, ​​சர்வதேச மொபைல் எண்களைக் கொண்டுள்ள NRE/NRO வங்கி கணக்குகளும் தங்களின் சர்வதேச மொபைல் எண்களை லிங்க் செய்து இனி UPI உடன் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படும் என்று இந்திய தேசிய பேமெண்ட் கார்பரேஷன் நிறுவனம் (NPCI) அறிவித்துள்ளது. இதனடிப்படையில் 10 நாடுகளுக்கு UPI- மூலம் பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த 10 நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், அமெரிக்கா மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகியவை அடங்கும் என்றும் இந்த பத்து நாடுகளின் மொபைல் எண்களில் இருந்து UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த NRI கணக்குகள் தற்போதுள்ள FEMA (Foreign Exchange Management Act) விதிமுறைகளின்படி மட்டுமே அனுமதிக்கப்படுவதை உறுப்பினர் வங்கிகள் உறுதிசெய்து, இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்கினால், UPI இல் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனடிப்படையில் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் தனது உறுப்பினர் வங்கிகளுக்கு இந்த புதிய திட்டத்திற்கான வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஏப்ரல் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படும் போது UPI நடவடிக்கையானது வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினர், தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களுக்கு உதவும் என கூறப்பட்டுள்ளது.

UPI என்பது இந்திய தேசிய பேமெண்ட் கார்பரேஷன் நிறுவனத்தின் மூலமாக நிறுவப்பட்ட டிஜிட்டல் கட்டண முறையாகும். இது இரண்டு வங்கி கணக்குகளுக்கு இடையே உடனடி பண பரிவர்த்தனை செய்ய உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.