ADVERTISEMENT

ஓமான்: வேலை தேடுபவர்களுக்காகவே பிரத்யேக ‘மொபைல் ஆப்’.. அறிமுகப்படுத்திய தொழிலாளர் அமைச்சகம்..!!

Published: 8 Jan 2023, 4:40 PM |
Updated: 8 Jan 2023, 4:43 PM |
Posted By: admin

ஓமான் நாட்டில் வேலை தேடும் நபர்கள், ஓமானி ஊழியர்கள் மற்றும் ஓமானில் தொழில்புரியும் நிறுவன முதலாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் Ma’ak எனும் புதிய மனிதவளப் பதிவேட்டிற்கான மொபைல் அப்ளிகேஷனை ஓமான் நாட்டின் தொழிலாளர் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

வேலை தேடும் நபர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மனிதவளப் பதிவேடு என்பது வேலை தேடுபவர்களின் தனிப்பட்ட தரவுகளின் அமைப்பாகும். இந்த பதிவேட்டில் பதிவு செய்யப்படும் வேலை தேடுபவர்களின் தரவுகள் சம்பந்தப்பட்ட அரசு முகவர்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், அதன் மூலம் அரசு மற்றும் தனியார் துறைகள், இராணுவ மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் இருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி அவர்களுக்கு தெரிவிக்க முடியும் என்றும் தொழிலாளர் அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் இந்த திட்டம் வேலை தேடுபவர்களுக்கு நேர்மறையான முடிவுகளுடன் உதவுதல் மற்றும் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுதல் போன்ற அரசின் நடவடிக்கைகளுக்கு தீவிரமான தீர்வுகளைக் கண்டறிய அமைச்சகம் எடுத்து வரும் வருங்கால திட்டங்கள் மற்றும் யோசனைகளுக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT