ADVERTISEMENT

UAE: பிரபல சுற்றுலா இடத்திற்கு செல்லும் சாலை 6 நாட்கள் மூடல்.. நேரங்களை வெளியிட்ட போக்குவரத்து மையம்..!!

Published: 31 Jan 2023, 5:30 PM |
Updated: 31 Jan 2023, 5:31 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம், அபுதாபியைச் சேர்ந்த முக்கிய சுற்றுலா இடத்திற்கு செல்லும் சாலை குறிப்பிட்ட நாட்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. அபுதாபியின் அல் அய்னில் உள்ள பிரபலமான ஜபெல் ஹஃபீத் மலைக்குச் செல்லும் சாலையான ஜபெல் ஹஃபீத் ஸ்ட்ரீட் அடுத்த வாரத்தில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 9 வரையிலான நாட்களின் குறிப்பிட்ட நேரங்களில் இந்த சாலை மூடப்படும் என தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த சாலை மூடப்படும் நேரங்களின் விபரங்களையும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் வெளியிட்டுள்ளது.

சாலை மூடப்படும் நேரங்கள்:

  • பிப்ரவரி 3: (மாலை 3 மணி முதல் 6 மணி வரை) மற்றும் (இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை)
  • பிப்ரவரி 4: (அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை)
  • பிப்ரவரி 5: (மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை)
  • பிப்ரவரி 6: (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) மற்றும் (மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை)
  • பிப்ரவரி 7: (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) மற்றும் (மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை)
  • பிப்ரவரி 8: (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை)
  • பிப்ரவரி 9: (காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை)

ADVERTISEMENT