அமீரக செய்திகள்

துபாய்: ஜூமைரா தெரு, இன்ஃபினிட்டி பாலம் உள்ளிட்ட 13 முக்கிய சாலைகள் நாளை மூடல்.. RTA ட்வீட்..!!

துபாயின் முக்கிய பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மூடப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. துபாயில் நாளை நடக்கவிருக்கும் ஆண்களுக்கான அல் சலாம் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் பந்தயத்தை முன்னிட்டு இந்த சாலைகள் 10 முதல் 15 நிமிடங்களுக்கு மூடப்பட இருப்பதாக RTA தெரிவித்துள்ளது.

இது குறித்து RTA தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜுமைரா தெரு உட்பட துபாயின் முக்கிய பகுதிகளில் இருக்கும் மொத்தம் 13 சாலைகள் 10 முதல் 15 நிமிடங்களுக்கு வெவ்வேறு நேரங்களில் பாதிக்கப்படும் என குடியிருப்பாளர்களையும், வாகன ஓட்டிகளையும் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, துபாயின் முக்கிய இடங்களான ஜுமைரா தெரு (Jumeirah Street), இன்ஃபினிட்டி பாலம் (Infinity Bridge), அல் கலீஜ் தெரு (Al Khaleej Street), 2வது டிசம்பர் தெரு (2nd December Street), 2வது ஜாபீல் தெரு (2nd Zaa’beel Street), மியூசியம் ஆஃப் தி பியூச்சர் ரவுண்டானா அருகில் உள்ள அல் முஸ்தக்பால் தெரு (Al Mustaqbal Street near Museum of the Future roundabout) ஆகிய சாலைகள் மூடப்படவிருப்பதாக RTA அறிவித்துள்ளது.

அதே போன்று மெய்டன் தெரு (Meydan Street), மனமா தெரு (Manama Street), எக்ஸ்போ தெரு (Expo Street), லெஹ்பாப் சாலை (Lehbab Road), அல் குத்ரா தெரு (Al Qudra Street), நஹ்யான் தெருவில் உள்ள அல் போர்சா தெரு (Al Boursa Street) மற்றும் ஷேக் சயீத் பின் ஹம்தான் தெரு (Sheikh Zayed bin Hamdan At Nahyan Street) ஆகிய சாலைகளும் மூடப்படுவதாக RTA குறிப்பிட்டுள்ளது.

இது தவிர, அல் குத்ரா பகுதியில் உள்ள சைக்கிள் ஓட்டும் பாதையும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை பகுதியளவில் மூடுவதாக RTA சமூக வலைதள பதிவில் கூறியுள்ளது.

அதில், எலைட் ஆண்கள் ரேஸ் – அல் சலாம் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் பந்தயத்திற்காக ஜனவரி 8, 2023 ஞாயிற்றுக்கிழமை அல் குத்ரா சைக்கிள் ஓட்டுதல் தடம் மதியம் 1:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை பகுதியளவில் மூடப்படும், சைக்கிள் ஓட்டும் குடியிருப்பாளர்கள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என RTA பதிவிட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!