அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொடரும் மழை.. மழைநீர் தேக்கம், மின்சார நிறுத்தம் குறித்து புகார் அளிக்க அவசர உதவி எண்கள் வெளியீடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வாரம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகின்றது.  கன மழை தொடர்ந்து பெய்து வரும் காரணமாக அமீரகத்தில் அவ்வப்போது சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் தேக்கமும், மின்சார நிறுத்தமும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை குறித்து குடியருப்பாளர்கள் அதிகாரிகளுக்கு புகார் அளிப்பதற்காக பல்வேறு எமிரேட்களில் உள்ள முனிசிபாலிட்டி அதிகாரிகள், 24 மணி நேரமும் செயல்படும் அவசர அழைப்பு மையங்கள் குறித்த தகவலை பகிர்ந்துள்ளனர். பொதுமக்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ள எண்களுக்கு அழைத்து தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரயிறுதியில் மழையின் தீவிரம் குறையும் என்றாலும், மழைநீர் தேக்கம் அல்லது மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால், நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர எண்கள் குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மழைநீர் தேங்குவதை எவ்வாறு புகாரளிப்பது

அபுதாபி

அபுதாபி முனிசிபாலிட்டி மற்றும் போக்குவரத்து துறைக்கு, 24×7 என வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும் 800 850 என்ற எண்ணில் அழைப்பு மையத்தை தொடர்புகொள்ளலாம் அல்லது ‘Tamm’ மொபைல் செயலியைப் பயன்படுத்தி, ‘Take a photo and Report’ சேவையின் மூலம் புகாரளிக்கலாம். 

துபாய்

துபாயில் இருப்பவர்கள் துபாய் முனிசிபாலிட்டி 24×7 கால் சென்டர் எண்ணான 800 900 மூலம் மழைநீர் தேங்குவதைப் புகாரளிக்கலாம் அல்லது அதே எண்ணில் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் கணக்கு மூலம் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

ஷார்ஜா

ஷார்ஜாவில் ஏற்பட்ட வெள்ளம் அல்லது நிலையற்ற வானிலையால் ஏற்படும் சேதங்களைப் புகாரளிக்க ஷார்ஜா முனிசிபாலிட்டி எண் 993ஐ அழைக்கலாம். இந்த சேவை 24 மணி நேரமும் கிடைக்கும்.

அஜ்மான்

கனமழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அஜ்மான் முனிசிபாலிட்டியை 80070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உம் அல் குவைன்

உம் அல் குவைனில் வசிப்பவர்கள் 800 898 என்ற எண்ணில் முனிசிபாலிட்டியை தொடர்பு கொள்ளலாம்.

ராஸ் அல் கைமா

ராஸ் அல் கைமாவில் மழைநீர் தேங்குவதைப் புகாரளிக்க, பொது சேவைத் துறையை (PSD) 8008118 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஃபுஜைரா

ஃபுஜைரா நகராட்சிக்கு, அவர்களின் வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்தை அழைக்கலாம் – 80036, இது நிலையற்ற வானிலையின் போது 24 மணி நேரமும் கிடைக்கும்.

மின் விநியோகத் தடைகள், பிற தொழில்நுட்பச் சிக்கல்களைப் புகாரளிப்பதற்கான அவசர எண்கள் நீங்கள் எந்த எமிரேட்டில் வசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். அதற்கான அவசர ஹாட்லைன் எண்கள்:

அபுதாபி

அபுதாபி மின்சார மற்றும் நீர் விநியோக நிறுவனமான ADDC-க்கு குடியிருப்பாளர்கள் 800 2332 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

துபாய்

துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தில் (DEWA) இரண்டு ஹெல்ப்லைன்கள் உள்ளன. வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்திற்கு நீங்கள் 04 601-9999 ஐ அழைக்கலாம் அல்லது அவசரநிலை என்றால், நீங்கள் எந்த நேரத்திலும் 991 ஐ அழைக்கலாம்.

ஷார்ஜா

ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (SEWA) இரண்டு தனித்தனி அழைப்பு மையங்களையும் கொண்டுள்ளது. அவசரநிலைகளுக்கு, 991ஐத் தொடர்புகொள்ளலாம் அல்லது வாடிக்கையாளர் பராமரிப்பு முகவரைத் தொடர்புகொள்ள விரும்பினால், 600 566665 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

வடக்கு பகுதிகள்

அமீரகத்தின் வடக்கு பகுதிகளில் இருக்கும் அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைராவில் வசிப்பவர்களுக்கு, மின்சாரம் மற்றும் நீரின் விநியோகம் நிர்வகிக்கும் மற்றும் மேற்பார்வையிடும் கூட்டாட்சி ஆணையம் எதிஹாத் நீர் மற்றும் மின்சாரம் ஆகும்.

இந்த எதிஹாட் நீர் மற்றும் மின்சாரம் மூன்று கட்டணமில்லா எண்களைக் கொண்டுள்ளது:

• மின்சாரம் தொடர்பான அவசரத் தேவைகளுக்கு – 991

• நீர் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு – 992

• கால் சென்டர் – 800 3392

Related Articles

Back to top button
error: Content is protected !!