ADVERTISEMENT

UAE: 200க்கும் மேலான அன்றாட பொருட்களுக்கு 2023 இறுதி வரை ஒரே விலை.. ‘பிரைஸ் லாக்’ பிரச்சாரத்தை அறிவித்த LULU..!!

Published: 17 Jan 2023, 1:11 PM |
Updated: 17 Jan 2023, 3:33 PM |
Posted By: admin

உலகளாவிய அளவில் காணப்படும் பணவீக்க விகிதங்களை முறியடிக்கும் விதமாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்கள் பணவீக்கத்தை சமாளிப்பதற்கு உதவும் வகையிலும் ஒரு புதிய பிரச்சாரத்தை லுலு ஹைப்பர்மார்க்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த பிரச்சாரம் குறித்து லுலு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அதன் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் 200 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கான விலையை லாக் செய்துள்ளாக தெரிவித்துள்ளது. இதனால் 2023 ஆம் ஆண்டு இறுதி வரை நாட்டில் உள்ள அனைத்து லுலு ஸ்டோர்களிலும், புதிய தயாரிப்புகள் மற்றும் பல்பொருள் அங்காடி பொருட்கள் உட்பட அனைத்து வகையான அன்றாடப் பொருட்களின் விலைகளில் எந்த உயர்வும் இருக்காது எனவும் லுலு நிறுவனம் கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு பற்றி லுலு குழுமத்தின் துபாய் இயக்குனர் சலீம் எம்.ஏ தெரிவிக்கையில் “எல்லோரும் போராடும் உலகளாவிய விலை பணவீக்கத்தை சமாளிக்க எங்கள் லுலு ஹைப்பர்மார்க்கெட் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இந்த புதுமையான ‘பிரைஸ் லாக்’ திட்டத்தை அறிவிப்பதில் லுலு குழுமம் மகிழ்ச்சி அடைகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் உள்ளூர் சந்தையை சமநிலைப்படுத்தவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்கவும் நாங்கள் எங்கள் சப்ளையர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம் என்றும், இந்த பிரச்சாரம் அன்றாட தேவைகளுக்கான அத்தியாவசிய தயாரிப்புகள் அனைத்துக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.