ADVERTISEMENT

எமிரேட்ஸ் ஐடி, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு வழங்கப்படும் ஃபோட்டோவிற்கான விதிமுறைகளை வெளியிட்ட அமீரகம்..!!

Published: 4 Jan 2023, 5:51 PM |
Updated: 4 Jan 2023, 5:55 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தாலோ அல்லது எமிரேட்ஸ் ஐடியை புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தாலோ, அதற்கான விண்ணப்பத்துடன் ஒரு புகைப்படத்தையும் நாம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அதற்காக நாம் சமர்ப்பிக்க வேண்டிய புகைப்படம் ஒரு சில தேவைகளை கட்டாயம் பூர்த்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையெனில் புகைப்படங்கள் மின்னணு அமைப்பால் நிராகரிக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடையாள நோக்கங்களுக்காக புகைப்படம் எடுக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் (ICAO) தரநிலைகளுக்கு ஏற்ப, அமீரக பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடி ஆகிய அடையாள நோக்கங்களுக்காக எடுக்கப்படும் புகைப்படம் சந்திக்க வேண்டிய விவரக்குறிப்புகளின் பட்டியலை அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான பெடரல் ஆணையம் (ICP) வெளியிட்டுள்ளது.

புகைப்படத்தில் இருக்க வேண்டிய அம்சங்கள்:

>> ஆறு மாதங்களுக்கு மேல் மிகாமல் சமீபத்தில் எடுக்கப்பட்ட உயர் தரமான கலர் புகைப்படம் (அளவு: 40 – 35 மிமீ அகலம்)

ADVERTISEMENT

>> புகைப்படத்தின் பின்னணி நிறம் வெள்ளை நிறமாக இருத்தல் வேண்டும்.
 

>> இயற்கையான, மிகைப்படுத்தப்படாத, நடுநிலையான முகபாவனையுடன் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

>> புகைப்படத்தில் இருப்பவரின் தலை சாய்க்காமல், நேராக, புகைப்பட லென்ஸுக்கு இணையாக இருத்தல் வேண்டும்.

>> புகைப்படத்தில் இருப்பவரின் கண்கள் கேமராவை நோக்கி திறந்த நிலையில் இருக்க வேண்டும் மற்றும் கலர் லென்ஸ்கள் பயன்படுத்தல் கூடாது.

>> புகைப்படத்தில் இருப்பவர் கண்ணாடி அணிந்திருந்தால் அவை கண்களை மறைக்காத மற்றும் ஒளியைப் பிரதிபலிக்காதவாறு இருக்க வேண்டும்.

>> அணிந்திருக்கும் ஆடையானது பாஸ்போர்ட்டில் உள்ள ஆடையைப் போன்றதாக இருக்க வேண்டும்.

>> தலையை மறைப்பது தேசிய உடை அல்லது மத நம்பிக்கையின் அடிப்படையில் அனுமதிக்கப்படும்.

>> புகைப்படத்தின் பிக்சல்கள் அளவானது மை தடயங்கள் அல்லது சுருக்கம் இல்லாமல் குறைந்தது 600 dpi ஆக இருத்தல் வேண்டும்.

மேலும் டிஜிட்டல் சாஃப்ட்வேரை பயன்படுத்தி திருத்தப்படும் படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.