அமீரக செய்திகள்

UAE: மனதை வருடும் ‘குளிர்ந்த காற்று’.. ஆங்காங்கே ‘மழைச்சாரல்’.. அமீரகம் எங்கும் ‘சட்டென்று மாறிய வானிலை’..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில் அமீரகத்தில் உள்ள அனைத்து எமிரேட்டுகளிலும் வெப்பநிலை குறைந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசி வருகிறது. இன்று அதிகாலை முதல் அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் மேகமூட்டமாகவும், சில பகுதிகளில் மழை பெய்தும் வருகிறது.

இன்றைய வானிலை குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமீரகத்தில் இன்று நாள் முழுவதும் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில நேரங்களில் மேகமூட்டத்துடன் கூடிய வெப்பச்சலனத்துடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடலோர, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெப்பநிலை மேலும் குறைவதோடு தீவிர மழைப்பொழிவு இருக்கலாம் என்றும், மிதமான முதல் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை நாடு முழுவதும் அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், அபுதாபியில் வெப்பநிலை 24ºC ஆகவும், துபாயில் வெப்பநிலை 23ºC ஆகவும் வெப்பநிலை உயரும் என்றும் கூறியுள்ளது.

அதேபோன்று குறைந்தபட்ச வெப்பநிலை அபுதாபியில் 18ºC ஆகவும், துபாயில் 20ºC ஆகவும், நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் 8ºC ஆகவும், அபுதாபி மற்றும் துபாயில் ஈரப்பதம் 30 முதல் 80 சதவீதம் வரை இருக்கும் எனவும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!