ADVERTISEMENT

அமீரகத்தில் 8°C வரை குறையும் வெப்பநிலை..!! மஞ்சள் எச்சரிக்கை விடுத்த தேசிய வானிலை மையம்..!!

Published: 2 Jan 2023, 9:25 AM |
Updated: 2 Jan 2023, 9:28 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெப்பநிலை குறைந்துள்ள நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று கடல் பகுதி மற்றும் தீவு பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் கூடிய வானிலை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து NCM அமீரகத்தில் நிலவும் பனிமூட்டம் காரணமாக அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் தெரிவுத்திறன் (visibility) குறைந்து காணப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறும், சாலையில் மாறிவரும் வேக வரம்புகளில் கவனம் செலுத்துமாறும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று இரவு மற்றும் செவ்வாய் காலை வேளைகளில் ஈரப்பதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என தேசிய வானிலை மையம் கணித்துள்ளது.

அதே நேரத்தில் அபுதாபியில் அதிகபட்ச வெப்பநிலை 25°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18°C ​​ஆகவும் இருக்கும் என்றும் துபாயில் அதிகபட்ச வெப்பநிலை 26°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19°C ஆகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் லேசானது முதல் மிதமான வேகத்தில் காற்று வீசும் என்றும் கடல் சற்று கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.