ADVERTISEMENT

UAE: இந்த இரண்டு மொபைல் ஆப் மட்டும் இருந்தாலே போதும்.. அனைத்து அரசு சேவைகளையும் எளிதில் பெறலாம்..!!

Published: 8 Feb 2023, 2:10 AM |
Updated: 5 Apr 2025, 3:33 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அரசாங்க சேவைகளை எளிதாக பெற்றுக்கொள்ள இரண்டு மொபைல் அப்ளிகேஷன்களை தங்களின் மொபைல் போனில் டவுன்லோடு செய்திருந்தாலே போதும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி UAEICP மற்றும் UAE PASS ஆகிய ஆப்களை பொதுமக்கள் டவுன்லோட் செய்து கொண்டு அரசின் சேவைகளை தங்களின் இருப்பிடங்களிலிருந்தே அனுகலாம் எனவும் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

அதிலும் குறிப்பாக அமீரகத்தின் வெவ்வேறு அரசுத் துறை சேவைகளை அணுகும் போதோ, விசா தொடர்பான சேவைகளை பெறுவதற்கோ, வேறு நாடுகளுக்கு யணம் செய்திருந்த நேரத்தில் டிஜிட்டல் கையெழுத்து தேவைப்படும் போதோ இந்த அப்ளிகேஷன்கள் வழங்கும் சேவைகள் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

UAE PASS என்பது அமீரகத்தின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான, பாதுகாப்பான முதல் தேசிய டிஜிட்டல் அடையாளமாகும். இது பல்வேறு துறைகளில் பல ஆன்லைன் சேவைகளை அணுகவும், ஆவணங்களை கையொப்பமிடவும், அங்கீகரிக்கவும் மற்றும் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், அதிகாரப்பூர்வ ஆவணங்களின் டிஜிட்டல் பதிப்பைக் கோரவும் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தவும் உதவுகிறது.

ADVERTISEMENT

ஒருவேளை அமீரகத்திற்கு வெளியே பயணம் மேற்கொண்டிருக்கும் நபர் ஆவணங்களில் கையொப்பமிட வேண்டிய தேவை வந்தால், அவரிடம் சரிபார்க்கப்பட்ட UAE பாஸ் இருக்கும் பட்சத்தில், அந்த நபர் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி அமீரகத்திற்கு வரவேண்டிய அவசியமின்றி ஆவணங்களில் டிஜிட்டல் கையொப்பம் கூட செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் முன்னதாக, அமீரகத்தின் தேசிய அடையாளம், சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான பெடரல் ஆணையமானது (ICP) அனைத்து நபர்களையும் UAEICP அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து, உறவினர் அல்லது நண்பருக்கு விசிட் விசாவைக் கோருவது உட்பட இதில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை எளிதில் பெற்று பயனடையுமாறு அழைப்பு விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது பற்றி துபாயில் உள்ள டைப்பிங் சென்டர் ஏஜென்ட் ஒருவர் கூறுகையில், “UAEICP போர்ட்டலானது விசாவிற்கு விண்ணப்பிக்க, விசா செல்லுபடியை சரிபார்க்க அல்லது அபராதத்தை சரிபார்க்க என இது போன்ற காரணங்களுக்காக பயன்படுத்தலாம். மேலும் EIDயின் (soft copy) நகலைப் பெற்று, உங்கள் ரெசிடென்ஸி அங்கீகாரத்தைப் பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.

UAE PASS

குடியிருப்பாளர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள விசா ஸ்டிக்கருக்கு பதிலாக புதிய எமிரேட்ஸ் ஐடியே போதுமானது என்றும் இந்த புதிய எமிரேட்ஸ் ஐடி மூலமாகவே அந்நபரின் விசா நிலையை தெரிந்து கொள்ளலாம் என்றும் அமீரக அரசு புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. ​​இந்நிலையில் EID எண், அதன் வெளியீட்டு தேதி, காலாவதி தேதி, உங்களின் முதலாளி உள்ளிட்ட எமிரேட்ஸ் ஐடியின் தகவல்களை வெளிப்படுத்த UAE PASS எமிரேட்ஸ் ஐடியிலிருந்து விவரங்களைப் பெறுகிறது என கூறப்பட்டுள்ளது.

UAE PASS வழங்கும் சேவைகள்:

  • அங்கீகாரம் வழங்குவதற்கு உங்கள் மொபைல் ஃபோன் மூலம் நீங்கள் யார் என்பதை நிரூபிக்கலாம் மற்றும் உங்களின் விபரங்களைப் பெறலாம்.
  • ஆவணங்களில் டிஜிட்டல் கையொப்பமிடலாம்.
  • கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சரிபார்க்கலாம்.
  • டிஜிட்டல் ஆவணங்களைப் பகிர்வதன் மூலம் உங்களின் உத்தியோகபூர்வ ஆவணங்களைக் கோரவும் மற்றும் சேவைகளைப் பெறவும் முடியும்.

UAEICP

இந்த அப்ளிகேஷன், ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள், தங்களின் விசாக்கள், ரெசிடென்ஸி, அபராதம் செலுத்துதல், குடிமக்களுக்கான பாஸ்போர்ட் புதுப்பித்தல் மற்றும் இது போன்ற பல சேவைகளை குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான பெடரல் ஆணையத்திடம் இருந்து பெற அனுமதிக்கிறது. 

UAEICP வழங்கும் சேவைகள்:

  • உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான ரெசிடென்ஸி என்ட்ரி பெர்மிட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
  • உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான ரெசிடென்ஸி பெர்மிட்களை புதுப்பிக்கலாம்.
  • உங்கள் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் ஸ்பான்சர் செய்யப்பட்ட எவருக்கும் ரெசிடென்ஸியை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம்.
  • உங்கள் உறவினர்களுக்கான விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
  • பயண நிலை அறிக்கை மற்றும் நீங்கள் ஸ்பான்சர் செய்யும் நபர்களின் பட்டியலை உருவாக்கலாம்.
  • உங்கள் ரெசிடென்ஸி மற்றும் என்ட்ரி பெர்மிட் நிலையை சரிபார்க்கலாம்.
  • உங்கள் விசிட் விசாவை நீட்டிக்கலாம்.
  • விசா மற்றும் ரெசிடென்ஸிக்கான அபராதம் செலுத்தலாம்.