குடும்ப ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கவும் மற்றும் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை ஓமானுக்கு ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய நடவடிக்கையாக, ராயல் ஓமன் காவல்துறை (ROP) வெளிநாட்டவர்களுக்கு குடும்ப விசாவைப் பெறுவதற்குத் தேவையான குறைந்தபட்ச சம்பளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்துள்ளது.
அதன்படி ஓமானில் வசிக்ககூடிய வெளிநாட்டவர்கள் தங்களின் குடும்பத்தினரை ஓமானிற்கு அழைத்து வருவதற்கான குறைந்த பட்ச சம்பள தகுதி 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ராயல் ஓமான் காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
அந்த அதிகாரியின் கூற்றுப்படி, ஓமான் நாட்டில் OMR150 க்கு மேல் (சுமார் 32,250 ரூபாய்) சம்பளம் வாங்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பங்களின் விசாக்களை ஸ்பான்சர் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக, குறைந்தபட்ச சம்பளம் OMR350 (சுமார் 75,230 ரூபாய்) ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தகுதியானது முதன்முதலில் ஓமன் அரசாங்கத்தால் 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய அறிவிப்பானது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.