அமீரக செய்திகள்

அமீரக நாட்டவர் தனியார் கம்பெனியில் எதிர்பார்க்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? பட்டியலை பாத்தா ஷாக் ஆயிடுவீங்க..!!

அமீரக குடிமக்கள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவதை கட்டாயமாக்கி ‘எமிராதிஷேசன்’ எனும் திட்டத்தை அமீரக அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி, ஜனவரி 1, 2023 முதல், மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் (MOHRE) அமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், 50 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேர் அமீரக நாட்டு குடிமக்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தனியார் துறையில் பணியமர்த்தப்படும் ஒரு அமீரக நாட்டவர், அவர்கள் நியமிக்கப்படும் துறை சார்ந்து எவ்வளவு சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அமீரகத்தில் உள்ள ஆட்சேர்ப்பு நிறுவனமான மைக்கேல் பேஜ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த சம்பள பட்டியலின்படி, அரசு நிறுவனங்களில் தலைமை நிதி அதிகாரியாக (CFO) பணிபுரியும் ஒரு அமீரக நாட்டவர் 165,000 திர்ஹம்ஸ் வரை மாதச் சம்பளமாக பெறலாம் எனவும், அதே பொறுப்புக்கு தனியார் துறையில் 150,000 திர்ஹம்ஸ் (இந்திய ரூபாயில் 30 லட்சத்திற்கு மேல்) வரை மாதச் சம்பளமாக செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் அமீரக நாட்டவரின் அனுபவம், அவரின் தனித்திறமை, அவர் விண்ணப்பிக்கும் வேலை, அவர் நிர்வகிக்கும் பதவி அல்லது பொறுப்பு மற்றும் அவர் பணிபுரியும் எமிரேட் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும் என, 2023 எமிரேடிசேஷன் சம்பள வழிகாட்டி மற்றும் பணியமர்த்தல் பற்றிய ஆய்வறிக்கையின் முடிவில் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் உள்ள பதவிகளுக்கு அமீரக குடிமக்கள் எதிர்பார்க்கும் சம்பள வரம்புகளின் விவரம் இங்கே:

நிதி மற்றும் கணக்கியல் (Finance and Accounting):
நிதி இயக்குனர் (Finance Director): Dh48,000 முதல் Dh90,000 வரை
கணக்காளர் (Accountant): Dh18,000 முதல் Dh28,000 வரை
முதலீட்டு இயக்குனர் (Investment Director): Dh55,000 முதல் Dh110,000 வரை

மனித வளங்கள் (Human Resources):
HR தலைவர்/இயக்குனர் (Head of HR/Director): Dh40,000 முதல் Dh80,000 வரை
மனிதவள நிபுணர் (HR Specialist): Dh24,000 முதல் Dh34,000 வரை
PRO (Public Relation Officer): Dh16,000 முதல் Dh26,000 வரை

சட்டம் (Legal):
தலைமை சட்ட ஆலோசகர் (Chief Legal Counsel): Dh72,000 முதல் Dh120,000 வரை
சட்ட துணை (Paralegal): Dh22,000 முதல் Dh32,000 வரை
இணக்க அதிகாரி (Compliance Officer): Dh15,000 முதல் Dh28,000 வரை

சந்தைப்படுத்துதல் (Marketing):
CMO (Chief Marketing Officer): Dh58,000 முதல் Dh110,000 வரை
சந்தைப்படுத்துதல் மேலாளர் (Marketing Manager): Dh25,000 முதல் Dh45,000 வரை
சமூக ஊடக மேலாளர் (Social Media Manager): Dh17,000 முதல் Dh35,000 வரை

அலுவலக உதவி (Office Support):
அலுவலக மேலாளர் (Office Manager): Dh24,000 முதல் Dh40,000 வரை
தனிப்பட்ட உதவியாளர் (Personal Assistant): Dh18,000 முதல் Dh30,000 வரை
வரவேற்பாளர் (Receptionist): Dh15,000 முதல் Dh22,000 வரை

கொள்முதல் மற்றும் விநியோகம் (Procurement and Supply Chain):
தலைமை கொள்முதல் அதிகாரி (Chief Procurement Office): Dh90,000 முதல் Dh125,000 வரை
கொள்முதல் மேலாளர் (Procurement Manager): Dh30,000 முதல் Dh50,000 வரை
கொள்முதல் அதிகாரி (Procurement Officer): Dh16,000 முதல் Dh30,000 வரை

தொழில்நுட்பம் மற்றும் தரவு (Technology And Data):
CTO (Chief Technology Officer): Dh70,000 முதல் Dh150,000 வரை
தரவு மேலாளர் (Data Manager): Dh40,000 முதல் Dh55,000 வரை
தகவல் தொழில்நுட்ப அதிகாரி (IT Officer): Dh18,000 முதல் Dh28,000 வரை

ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை தீர்மானத்தின்படி, வரும் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள், தனியார் நிறுவனங்கள் 10 சதவீத எமிரேடிசேஷன் விகிதத்தை அடைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். அமீரக அரசின் இந்த இலக்கை அடைய ஒவ்வொரு வருடமும் 2 சதவீத அமீரக நாட்டவர்களை தனியார் நிறுவனங்கள் பணியமர்த்த வேண்டும். இதற்கு இணங்கத் தவறும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படும் என்பதோடு சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

அமீரக அரசின் இந்த நடவடிக்கையானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் எமிராட்டி மனித வளங்களின் போட்டித்திறனை அதிகரிப்பதையும், தனியார் துறையில் வேலைகளை ஆக்கிரமிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட கூட்டாட்சித் திட்டமான Nafis இன் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!