ADVERTISEMENT

அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும் பல விமானங்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம்.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ட்வீட்.. பயணிகளின் கவனத்திற்கு..!!

Published: 25 Mar 2023, 12:45 PM |
Updated: 25 Mar 2023, 2:21 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பல விமான நிறுவனங்கள் மார்ச் 26 ம் தேதி முதல் கோடை கால பயண அட்டவணைக்கு (Summer Schedule) மாறுவதால், விமானம் புறப்படும் நேரங்களில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது. இதனையொட்டி பயணிகள் தங்களின் விமானம் புறப்படும் நேரத்தை பயணத்திற்கு முன் மீண்டும் உறுதிசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்படும் விமான நிறுவனங்கள் நான்கு அட்டவணையில் வேலை செய்கின்றன, அவற்றில் கோடை கால அட்டவணை மார்ச் 26 முதல் அக்டோபர் 28 வரை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு விமான நிலையங்களிலிருந்து பயணிக்கவுள்ள பயணிகள் தங்கள் விமானம் புறப்படும் நேரத்தை மீண்டும் உறுதிப்படுத்துமாறு விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அதன் அனைத்து பயணிகளுக்கும் சமூக ஊடகங்களில் அவர்களின் விமானம் புறப்படும் நேரம் மற்றும் PNR எண்களை பயணம் செய்வதற்கு முன் மீண்டும் சரிபார்க்குமாறு ஒரு எச்சரிக்கை பதிவை அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து பயண முகவர்கள் கூறுகையில் “விமானங்களுக்கான அட்டவணை மாற்றத்தின் போது, ​​விமான நேரங்களை சரிபார்ப்பது அல்லது மீண்டும் உறுதிப்படுத்துவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த சமயத்தில், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு இடையே ஒரு முறைப்படுத்தல் செயல்முறை நடந்து வருகிறது. எனவே விமானப் பயணிகள் தங்கள் விமான நேரத்தைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு பயண முகவர் கூறுகையில், “நாட்டில் உள்ள அனைத்து பயண நிறுவனங்களும் இது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய விமான நேரங்கள் அவற்றின் போர்டல்களில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. துபாயில் இருந்து புறப்படும் பல விமானங்களின் நேரம் பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.  அத்துடன் அவர்கள் மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் பயணிகளுக்கு இந்த நேர மாற்றம் குறித்த எச்சரிக்கைகளை அனுப்பி வருவதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT