ADVERTISEMENT

வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் எந்த வேலை பார்த்தாலும் சவூதி சுற்றுலா விசா பெற முடியும்..!! வெளியான புதிய அறிவிப்பு..!!

Published: 10 Mar 2023, 6:37 PM |
Updated: 10 Mar 2023, 7:51 PM |
Posted By: admin

வளைகுடா நாடுகளில் வசித்து வரும் அனைத்து வெளிநாட்டவர்களும், அவர்களது தொழிலைப் பொருட்படுத்தாமல் சவூதியின் சுற்றுலா விசாவைப் பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அரேபிய அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த முடிவை சவூதியின் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் வரை வளைகுடா நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் குறிப்பிட்ட தொழில் பிரிவைச் சார்ந்தவர்களுக்கே சுற்றுலா விசா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

GCC நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இந்த மின்னணு சுற்றுலா விசாவைப் (e-tourist visa) பெற, “Visit Saudi” தளத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களின் ரெசிடென்ஸி பெர்மிட்டானது குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடி கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரெசிடென்ஸி விசா வைத்திருப்பவர்களின் முதல்-நிலை உறவினர்கள் மற்றும் ஸ்பான்சர்களுடன் வருகை தர விரும்பும் வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த சுற்றுலா விசாவைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாவில் சவூதிக்கு செல்ல விரும்புவோர் www.visitsaudi.com அல்லது வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mofa.gov.sa இல் விசா பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் ஹஜ் காலங்களில் ஹஜ் செய்யவோ அல்லது உம்ரா செய்யவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மற்ற சமயங்களில் சிங்கிள் மற்றும் மல்டி என்ட்ரி விசா சுற்றுலா மற்றும் உம்ரா செய்வதற்கு செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிங்கிள் என்ட்ரி விசாவின் மூலம் 30 நாட்கள் வரை சவூதியில் தங்கலாம் என்றும் மல்டி என்ட்ரி விசா வைத்திருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு 90 நாட்கள் வரை தங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT