அமீரக செய்திகள்

புதுப்பொலிவுடன் களமிறங்கும் எமிரேட்ஸ் விமானம்.. புதிய ஆறு மாற்றங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் விமானத்தின் சிறப்பம்சங்கள் இதோ..!!

துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனம் அதன் விமானங்களில் தீட்டப்பட்டிருக்கும் வண்ணங்களை புதுப்பித்து புதிய வண்ணங்களை வெளியிட்டுள்ளது. கழுகுக் கண்களைக் கொண்ட விமானப் புள்ளிகள் மற்றும் இறக்கை முனைகளில் தீட்டப்பட்டிருக்கும் புதிய வண்ணங்கள், மற்றும் விமானத்தின் வால் பகுதியில் 3D வடிவில் கொடுக்கப்பட்டுள்ள அமீரகத்தின் தனித்துவமான கொடி உள்ளிட்ட மாற்றங்களுடன் எமிரேட்ஸ் விமானம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

புதுப்பொலிவுடன் களமிறங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் தலைவர் டிம் கிளார்க் கூறுகையில், எங்கள் விமானத்தின் வால் பகுதியில் இருக்கும் அமீரக நாட்டின் கொடி மற்றும் அரபு மொழியில் இருக்கும் கையெழுத்து போன்ற நமது அடையாளத்தின் முக்கிய கூறுகளை இழக்காமல், நவீன உலகிற்கு ஏற்ப புதுப்பித்தலை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் எந்தவொரு விமான நிறுவனத்தின் அடையாளத்தையும் உடனடியாக வெளிப்படுத்தக்கூடிய பகுதி விமானத்தின் நடுப்பகுதி ஆகும். அதாவது விமானத்தின் உடற்பகுதியில் உள்ள அடையாளங்களே முதலில் அனைவரின் பார்வைக்கும் தோன்றும். அதுவே எங்களின் தனித்துவமான அடையாளத்தை உலகிற்கும் காட்சிப்படுத்தும். அதற்கேற்ப எங்களின் வண்ணங்களை புதுப்பிப்பதில் நாங்கள் பெருமைகொள்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஆறு மாற்றங்கள்:

ஒன்றாவதாக, எமிரேட்ஸ் விமானத்தின் வால் பகுதியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியகொடி மிகவும் கம்பீரத்துடன் மற்றும் 3D எஃபெக்ட் கலைப்படைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, விமானத்தின் இறக்கைகளில் பளிச்சென்ற சிவப்பு வண்ணத்தின் மீது அரேபிய கையெழுத்தில் மேலிருந்து கீழாக வெள்ளை நிறத்தில் எமிரேட்ஸ் லோகோ கொடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடியின் நிறங்கள் விமான இறக்கையின் முனைகளில் வரையப்பட்டுள்ளது. இதனை விமானத்தில் பயணம் செய்பவர்கள் ஜன்னலின் வழியாக காணலாம்.

நான்காவதாக, அரேபிய கையெழுத்துடன் “Emirates” என்ற ஆங்கில எழுத்துக்களும் விமானத்தின் முக்கிய பகுதி முழுவதும் தங்க நிறத்தில் எழுதப்பட்டுள்ளது, இது காண்பதற்கே கம்பீரமானதாகவும், முந்தைய அளவை விட 32.5 சதவீதம் பெரியதாகவும் வடிவமைக்கப்பட்டுளளது.

ஐந்தாவதாக, “Emirates” என்ற விமான நிறுவனத்தின் பெயருக்கு கீழே இருக்கும் “Emirates.com” என்ற இணையதள URL எழுத்துக்களானது விமானத்தின் வடிவமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஆறாவதாக, எமிரேட்ஸ் 2005 இல் அறிமுகப்படுத்திய அதன் சின்னமான சிவப்பு முத்திரையை மேலும் மெருகூட்டி விமானத்தின் அடிப்பகுதியில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

எமிரேட்ஸ் தனது விமானங்களின் வண்ணங்களை புதுப்பிப்பது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் முதலாவதாக 1985 இல் ஏர்லைன் அறிமுகப்படுத்தப்பட்ட போது புதிய வண்ணங்களுடன் எமிரேட்ஸ் விமானம் வெளியிடப்பட்டது. அதற்கு பின்னர் இரண்டாவது முறையாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு வண்ணங்கள் புதுப்பிக்கப்பட்டு, தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வரும் எமிரேட்ஸ் விமானத்தின் வண்ணங்கள் தீட்டப்பட்ட முதல் போயிங் 777-300 விமானம் 1999 ம் ஆண்டு துபாய் ஏர்ஷோவில் டெலிவரி செய்யப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட விமானங்களை எப்போது முதல் காணலாம்?

எமிரேட்ஸின் புதுப்பிக்கப்பட்ட வண்ணங்களுடன் வெளிவரும் முதல் விமானம் A6-EOE என்று எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விமானம் Airbus A380 ஆகும், இதனைத் தொடர்ந்து, 17 புதிய போயிங் 777 விமானங்கள் உட்பட 24 விமானங்களுடன் தற்போதுள்ள எமிரேட்ஸ் விமானங்களில் புதிய வண்ணங்கள் படிப்படியாகப் பயன்படுத்தப்படும் என்றும், இது 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எமிரேட்ஸ் விமானத்தின் அனைத்து விமானங்களிலும் புதுப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!