ADVERTISEMENT

வானவேடிக்கை, சிறப்பு தள்ளுபடி, இரவுச் சந்தைகள் என களைகட்டும் துபாய்.. ரமலான் மாதம் முழுவதும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு..

Published: 25 Mar 2023, 8:45 PM |
Updated: 25 Mar 2023, 9:16 PM |
Posted By: admin

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானை முன்னிட்டு துபாய் முழுவதும் ஷாப்பிங் ஆஃபர்ஸ், வானவேடிக்கை, ஸ்ட்ரீட் ஃபுட் மார்க்கெட், சிறந்த ஆன்லைன் விற்பனை மற்றும் தங்குமிடங்களில் பெரும் தள்ளுபடி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் குடியிருப்பாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மார்ச் 23 முதல் ரமலான் மாதம் முடியும் வரை நடக்கவிருக்கும் இத்தைகைய கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை துபாய் பெஸ்டிவல்ஸ் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம் (Dubai Festivals and Retail Establishment – DFRE) நடத்தவுள்ளது. அதில் சிறந்த ஷாப்பிங் அனுபவம், பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் தள்ளுபடி போன்றவற்றை குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் அனுபவிக்கலாம்.

அமீரகத்தில் வானிலை தற்போது சிறப்பானதாக இருக்கும் இவ்வேளையில் இதை ஒரு பண்டிகைக் காலமாக மாற்ற விரும்புவதாகவும், அடுத்த பத்து ஆண்டுகளில் துபாயில் துடிப்பான ரமலான் மாதத்தை திட்டமிடுவதில் DFRE கவனம் செலுத்துவதாகவும், அதன் பெஸ்டிவல் மற்றும் நிகழ்வுகளின் நிர்வாக இயக்குநரான சுஹைலா குபாஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ரமலான் சிறப்பு புரொஜெக்ஷன்:

மார்ச் 23 முதல் ஏப்ரல் 22 வரை ‘Ramadan in Dubai Reflections’ என்ற பிரம்மிக்க வைக்கும் நிகழ்வு அல் சீஃபில் நடைபெறும் என்றும், துபாய் நகரின் மரங்கள், சாலையோரங்கள் மற்றும் ஷாப்பிங் இடங்களை வண்ண விளக்குகளால் ஒளிரச்செய்வதுடன், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் (DFCM) தினசரி ‘Imagine Ramadan Projection’ எனும் ரமலான் பற்றிய தொகுப்பு காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தள்ளுபடி:

ஆண்டின் தனித்துவமான மற்றும் சிறப்புமிக்க ரமலான் மாதத்தின் போது, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறப்பு நினைவுகளை உருவாக்க முடியும் என்று DFRE இன் CEO அஹ்மத் அல் காஜா கூறியுள்ளார். குறிப்பாக ரமலான் மாதத்தில் 200க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் ‘ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்’ உள்ளிட்ட பல சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

வானவேடிக்கை:

ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் ப்ளூவாட்டர்ஸ், JBR பகுதியில் உள்ள தி பீச், அல் சீஃப் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் ஆகிய நான்கு இடங்களில் மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வானவேடிக்கை காட்சிகளும் இடம்பெறும். அத்துடன் மார்ச் 31 முதல் ஏப்ரல் 9 வரை ரமலான் தீம் அலங்காரம், சில்லறை பொருட்கள் மற்றும் கலாச்சார பொழுதுபோக்குகளை குடியிருப்பாளர்கள் அனுபவிக்க முடியும்.

இரவு சந்தை:

ரமலான் மாதத்தில் எக்ஸ்போ சிட்டி துபாய், குளோபல் வில்லேஜ், ஹத்தா உட்பட 10 இடங்களில் ரமலான் மாத சிறப்பு இரவுச் சந்தைகள் நடைபெறும். மேலும் துபாயில் உள்ள பல ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் அரங்குகள் ரமலான் மத சிறப்பு தள்ளுபடிகளுடன் உணவுகள் மற்றும் பானங்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளையும் வழங்கும்.