ADVERTISEMENT

UAE: சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு இலவச பேருந்து சேவை..!! அறிவிப்பை வெளியிட்ட எமிரேட்..!!

Published: 20 Mar 2023, 1:47 AM |
Updated: 20 Mar 2023, 8:02 AM |
Posted By: admin

அமீரகத்தில் இன்று (மார்ச் 20) சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ராஸ் அல் கைமா எமிரேட்டில் வசிப்பவர்களுக்கு இலவச பொது பேருந்து சேவை வழங்கப்படும் என அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை மக்கள் அதிகளவு பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் திட்டத்தின் அடிப்படையில், ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் (RAKTA) மற்றும் உள் பொதுப் போக்குவரத்து சேவையின் ஆபரேட்டர், அரேபியா பேருந்து நிறுவனம் ஆகியவை, ராஸ் அல் கைமாவில் உள்ள அனைத்து பொதுப் பேருந்து பயனர்களுக்கும் ‘இலவச போக்குவரத்து’ முயற்சியைத் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

இந்த போக்குவரத்து சேவையானது எமிரேட்டின் நான்கு முக்கிய வழித்தடங்களை உள்ளடக்கியது என கூறப்பட்டுள்ளது. அவை சிவப்பு பாதை (red route), நீல பாதை (blue route), பச்சை பாதை (green route) மற்றும் ஊதா பாதை (purple route) ஆகும். அத்துடன் இந்த வழித்தடங்களில் இரு திசைகளிலும் நிறுத்தங்கள் இருக்கும் என்றும் இது ராஸ் அல் கைமாவில் உள்ள பல்வேறு இடங்கள் மற்றும் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து தெட்வொர்க்கை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAKTA இன் பொது மேலாளர் Eng இஸ்மாயில் ஹஸன் அல் பலூஷி இது பற்றி கூறுகையில், ராஸ் அல் கைமாவில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் தங்கள் தினசரி பயணங்களில் அவர்கள் செல்ல வேண்டிய பல்வேறு இடங்களை அடைய பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க பல முயற்சிகளை  ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்று விளக்கியுள்ளார். 

ADVERTISEMENT

மேலும் சர்வதேச மகிழ்ச்சி தினத்தை ஒட்டி, பொதுப் பேருந்துகள் மூலம் “இலவச போக்குவரத்து” என்ற முயற்சியைத் தொடங்குவதில் இருந்து, பொது போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க RAKTA ஆர்வமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஸ் அல் கைமா பொதுச் சேவைத் துறை (RAKPSD) சர்வதேச மகிழ்ச்சி தினத்தைக் முன்னிட்டு சில பொதுவான மீறல்களைச் செய்த குடியிருப்பாளர்களுக்கு 50% தள்ளுபடியை வழங்குவதாகவும் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி மார்ச் 20 முதல் 22 வரை மூன்று நாட்களுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், மகிழ்ச்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு ஒரு முக்கிய குறிக்கோளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT