ADVERTISEMENT

பஹ்ரைன் ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பின் சார்பாக முஸ்லீம் லீக்கின் தலைவருக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி

Published: 19 Mar 2023, 5:38 PM |
Updated: 21 Mar 2023, 9:28 PM |
Posted By: admin

பஹ்ரைனில் உள்ள கோழிக்கோடு மாவட்ட கேரளா இஸ்லாமிய கலாச்சர மையம் ஏற்பாடு செய்த விழாவில் பங்கேற்பதற்காக பஹ்ரைனிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவர் முனிருல் மில்லத் பேராசிரியர் காதர் முகையதீன் அவர்கள் வந்திருந்தார்.

ADVERTISEMENT

அவரை பஹ்ரைன் ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு சார்பில் மதிமுக வளைகுடா முன்னாள் அமைப்பாளர் வல்லம் பசீர், ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கையூம், சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத்துல்லா, திமுக முதன்மை செயலாளர் முத்து சாமி, ISF தலைவர் நவாஸ், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டியன், மதிவாணன், மதிமுக பொருளாளர் இளையராஜா உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து பஹ்ரைன் ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்த இரவு விருந்தில் பேராசிரியர் காதர்மொகையதீன் கலந்துகொண்டு பஹ்ரைனில் வசிக்கும் தமிழ் மக்களின் ஒற்றுமையையும் சமூக நலப் பணியையும் பாராட்டி வாழ்த்துரை நிகழ்த்தினார்.