அமீரக செய்திகள்

UAE: பல பகுதிகளில் தற்காலிக சாலை மூடல்களை அறிவித்த அபுதாபி..!! எப்போது வரை..??

அபுதாபியில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் பல பகுதி சாலை மூடல்கள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவித்துள்ளது. அதில் மார்ச் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் இருந்து மார்ச் 13 திங்கள் வரை மூடப்பட்டிருக்கும் சாலை குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சாலை ஏப்ரல் 6 வியாழன் வரை மூடப்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அபுதாபியில் மூடப்படும் சாலைகள் குறித்த விபரங்கள்:

1. முகமது பின் கலீஃபா ஸ்ட்ரீட்டில் பகுதி சாலை மூடல்

மார்ச் 10 வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி முதல் மார்ச் 11 சனிக்கிழமை இரவு 11.30 மணி வரை இந்த சாலையின் இடது பாதை மூடப்படும்.  இரண்டு வலது பாதைகளும் மார்ச் 11 சனிக்கிழமை இரவு 11.30 மணி முதல் மார்ச் 13 திங்கள் காலை 5 மணி வரை மூடப்படும்.

2. அல் ரீஃப் பாலத்தில் சாலையின் வளைவு பகுதி மூடல்

அல் ஃபலாவிலிருந்து துபாய் நோக்கிச் செல்லும் பாதை மார்ச் 11 சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் மார்ச் 13 திங்கள் காலை 5 மணி வரை மூடப்படும்.

3. ஷக்பூத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்டில் பகுதி சாலை மூடல்

மார்ச் 12, ஞாயிறு முதல் ஏப்ரல் 6, வியாழன் வரை சாலை மூடப்படும். சாலையின் எதிர்புறம் போக்குவரத்து திருப்பி விடப்படும்.

4. வஹத் அல் கராமா ஸ்ட்ரீட்டில் பகுதியளவு மூடல்

மார்ச் 11 சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் மார்ச் 13 திங்கட்கிழமை காலை 5 மணி வரை சாய்வுப் பாதை பகுதியளவில் மூடப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!