அமீரக செய்திகள்

அமீரகத்தில் முட்டை, கோழி உள்ளிட்ட பவுல்ட்ரி பொருட்களின் விலை உயர்வு.. அறிவிப்பை வெளியிட்ட பொருளாதார அமைச்சகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் முட்டை மற்றும் கோழி உள்ளிட்ட பவுல்ட்ரி பொருட்களின் (poultry products) விலை உயர்த்தப்படுவதாக அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான இந்த பொருட்களுக்கு அதிகபட்சமாக 13 சதவீதம் வரை விலை அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த விலை உயர்வு தற்காலிகமானது என்றும், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் அமைச்சகத்தால் இது மதிப்பிடப்படும் என்றும் பொருளாதார அமைச்சகம் இன்று சனிக்கிழமை (மார்ச் 18) தெளிவுபடுத்தியுள்ளது.

அத்துடன் வணிகர்கள் மற்றும் நுகர்வோர் இடையே சமநிலையான உறவை உறுதிசெய்து, உணவுப் பாதுகாப்பைப் பேணுவதற்கான அமைச்சகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக மார்ச் 6 ஆம் தேதி வெளியிடப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த விலை அதிகரிப்பு உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோழி பண்ணைகளுக்கான பராமரி செலவு, தீவனம் மற்றும் உற்பத்திக்கு தேவையான பொருட்களின் இறக்குமதி செலவு போன்ற அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாக கடந்த காலத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததாகக் கூறி, இந்தத் துறையில் இயங்கும் பல நிறுவனங்கள் அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சகம் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!