ADVERTISEMENT

அபுதாபியின் புதிய பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்ட ஷேக் காலித்.. அவரை பற்றிய சில தகவல்கள்..?

Published: 30 Mar 2023, 4:13 PM |
Updated: 30 Mar 2023, 4:48 PM |
Posted By: admin

அபுதாபி எமிரேட்டின் புதிய பட்டத்து இளவரசராக மாண்புமிகு ஷேக் காலித் பின் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்பிமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஏழு எமிரேட்களின் ஆட்சியாளர்களைக் கொண்ட நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரமான ஐக்கிய அரபு அமீரக ஃபெடரல் சுப்ரீம் கவுன்சிலின் ஒப்புதலுடன் இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அபுதாபியின் புதிய பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷேக் காலித் அவர்கள், 1982 ம் ஆண்டு ஜனவரி 8 ம் தேதி அன்று பிறந்துள்ளார். தற்போது 41 வயதை அடைந்திருக்கும் ஷேக் காலித், அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் மூத்த மகன் ஆவார்.

மேலும், பிப்ரவரி 15, 2016 அன்று தேசிய பாதுகாப்புத் தலைவராக நியமிக்கப்பட்ட ஷேக் காலித் அவர்கள், ஜனவரி 16, 2017 ம் ஆண்டு அமீரக நாட்டின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பதவி வகித்துள்ளார். அதன் பிறகு 2019 இல் அபுதாபி நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், அபுதாபி நிர்வாக அலுவலகத்தின் தலைவராகவும், 2021 இல் ADNOC இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, அக்டோபர் 2021 இல் அபுதாபி செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்சை (ADX) முன்னணி பங்குச் சந்தையாக வலுப்படுத்த அபுதாபி ஐபிஓ நிதியைத் (Abu Dhabi IPO Fund) தொடங்கி வைத்தித்துள்ளார். அத்துடன் கடந்த 2022 ம் ஆண்டு அமீரகத்திற்கு வருகை தந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியமுடன் இணைந்து, அபுதாபியில் உள்ள ஜுபைல் சதுப்புநில பூங்காவில் அபுதாபி சதுப்புநில முன்முயற்சியையும் ஷேக் காலித் தொடங்கியுள்ளார்.

அபுதாபியின் பட்டத்து இளவரசராக இருந்து வந்த மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், முன்னாள் ஜனாதிபதியான ஷேக் கலீஃபா அவர்களின் மறைவிற்கு பின்னர் அமீரகத்தின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது அபுதாபியின் புதிய பட்டத்து இளவரசராக ஷேக் முகமது பின் சயீத் அவர்களின் மூத்த மகன் ஷேக் காலித் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT