ADVERTISEMENT

தனியார் துறை ஊழியர்களுக்கான ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நாட்களை அறிவித்த அமீரகம்..!!

Published: 13 Apr 2023, 3:55 PM |
Updated: 15 Apr 2023, 9:16 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) தனியார் துறை ஊழியர்களுக்கான ஈத் அல் ஃபித்ரின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி ஈத் அல் ஃபித்ர் விடுமுறையானது ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை (இஸ்லாமிய காலண்டர் மாதங்கள்) இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முன்னதாக, அரசாங்க மனித வளங்களுக்கான மத்திய ஆணையம் (FAHR) பொதுத் துறைக்கு இதே விடுமுறை நாட்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களை அரசு ஒருங்கிணைத்துள்ளது. இதன் காரணமாக அமீரகத்தில் உள்ள அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு ஒரே மாதிரியான விடுமுறைகள் கிடைக்கின்றன.

விடுமுறை நான்கு நாட்களா அல்லது ஐந்து நாட்களா..??

பொதுவாக பிறை பார்ப்பதை பொறுத்து இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். இந்த வருடம் ரமலான் மாதத்தின் 29 ம் நாள் ஏப்ரல் 20 வியாழன் அன்று வருகிறது. அன்றைய இரவில் பிறை காணப்பட்டால், ஏப்ரல் 21 வெள்ளிக்கிழமை, ஈத் முதல் நாளாகும். இது குடியிருப்பாளர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறையைத் தரும்.

ADVERTISEMENT

ஒருவேளை அன்று பிறை தென்படவில்லை என்றால், ஏப்ரல் 22 சனிக்கிழமை, ஈத் அல் ஃபிதர்ரின் முதல் நாளாக இருக்கும் மற்றும் குடியிருப்பாளர்கள் ஐந்து நாட்கள் விடுமுறையைப் பெறுவார்கள். வானியல் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு ரமலான் 29 நாட்கள் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.