ADVERTISEMENT

அபுதாபி: இன்று முதல் தற்காலிகமாக பகுதியளவு மூடப்படும் சாலை..!! வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்..!!

Published: 20 May 2023, 9:13 AM |
Updated: 20 May 2023, 10:25 AM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள அல் கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட்டின் ஒரு பகுதியானது இன்று சனிக்கிழமை (மே 20) அதிகாலை 1 மணி முதல் திங்கள் (மே 22) அதிகாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி அபுதாபியில் இருக்கும் சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டிக்கு எதிரே உள்ள முசாஃபா பாலத்தை நோக்கிய வலது பாதை மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து சாலை பயனர்களும் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டவும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கவும் ITC கேட்டுக் கொண்டுள்ளது. 

ADVERTISEMENT

இதனுடன் சேர்த்து இன்று அபுதாபியின் அல் ரீஃப் பகுதியில் புதியதாக ஒரு பாலமும் இணைப்பு சாலைகளும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.