அமீரக செய்திகள்

அமீரகத்தில் 43 நாட்டவர்கள் ‘டிரைவிங் டெஸ்ட்’ இல்லாமலேயே UAE டிரைவிங் லைசென்ஸை பெற்றுக்கொள்ளலாம்.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவது பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இருந்தாலும், வெளிநாட்டவர்களும் அமீரகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அமீரகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பு குடியிருப்பாளர்கள் பல சோதனைகளுக்கு ​​உட்படுத்தப்படும் நிலையில், குறிப்பிட்ட ஒரு சில நாடுகளின் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு நாட்டில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதன்படி, ‘Markhoos’ என்ற முன்முயற்சியில் ஓட்டுநர் உரிமங்களை பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு சேவையை உள்துறை அமைச்சகம் (MoI) அறிவித்துள்ளது. அதன்படி, அமீரகத்தின் ரெசிடென்சி விசா வைத்திருக்கும் வெளிநாட்டினர் தங்கள் தேசிய ஓட்டுநர் உரிமத்தை, UAE டிரைவிங் லைசென்ஸாக மாற்றிக்கொள்ள முடியும்.

இது குறித்து உள்துறை அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்ட பட்டியலின் படி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள 43 நாடுகளில் ஓட்டுநர் உரிமம் பெற்ற அமீரக குடியிருப்பாளர்கள், தங்கள் சொந்த நாட்டின் ஒட்டுநர் உரிமத்தை வைத்தே, டிரைவிங் டெஸ்ட் எதுவுமின்றி UAE ஓட்டுநர் உரிமமாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

அந்த 43 நாடிகளின் பட்டியல்:

  1. எஸ்டோனியா
  2. அல்பேனியா
  3. போர்ச்சுகல்
  4. சீனா
  5. ஹங்கேரி
  6. கிரீஸ்
  7. உக்ரைன்
  8. பல்கேரியா
  9. ஸ்லோவாக்ஸ்
  10. லோவேனியா
  11. செர்பியா
  12. சைப்ரஸ்
  13. லாட்வியா
  14. லக்சம்பர்க்
  15. ஆஸ்திரேலியா
  16. லிதுவேனியா
  17. மால்டா
  18. ஐஸ்லாந்து
  19. மாண்டினீக்ரோ
  20. அமெரிக்கா
  21. பிரான்ஸ்
  22. ஜப்பான்
  23. பெல்ஜியம்
  24. சுவிட்சர்லாந்து
  25. ஜெர்மனி
  26. இத்தாலி
  27. ஸ்வீடன்
  28. அயர்லாந்து
  29. ஸ்பெயின்
  30. நார்வே
  31. நியூசிலாந்து
  32. ருமேனியா
  33. சிங்கப்பூர்
  34. ஹாங்காங்
  35. நெதர்லாந்து
  36. டென்மார்க்
  37. ஆஸ்திரியா
  38. பின்லாந்து
  39. இங்கிலாந்து
  40. துருக்கி
  41. கனடா
  42. போலந்து
  43. தென்னாப்பிரிக்கா

இது தவிர துபாயில் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க நினைப்பவர்களுக்கு வசதியாக ‘கோல்டன் சான்ஸ்’ முறையை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாயில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கும் மேற்கண்ட 43 நாடுகளை தவிர்த்து, இந்தியா, இலங்கை போன்ற மற்ற நாடுகளை சேர்ந்த குடியிருப்பாளர்கள் பயிற்சி வகுப்பகள் எதுவுமின்றி நேரடியாக ரோடு டெஸ்ட்டில் பங்குபெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது பற்றிய கூடுதல் விபரங்களை அறிய நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

துபாயில் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ‘கோல்டன் சான்ஸ்’-ஐ அறிமுகப்படுத்திய RTA.. லக்கு இருந்தால் இனி நேரடி லைசென்ஸ்..!!

Related Articles

Back to top button
error: Content is protected !!