ADVERTISEMENT

துபாய்க்கு விசிட்/சுற்றுலா/டிரான்சிட் விசால வர்றவங்க சொந்தமாவே கார் ஓட்டலாம்.. இதை மட்டும் செஞ்சா போதும்..!!

Published: 11 Jun 2023, 10:29 AM |
Updated: 11 Jun 2023, 10:46 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல நாடுகளுக்கு சுற்றிப்பார்க்கச் செல்லும் பல சுற்றுலாப்பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லக்கூடிய மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று சர்வதேச ஓட்டுநர் உரிமம் (International driving licence- IDL) ஒன்றாகும். ஏனெனில் இந்த லைசென்ஸ் வைத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் அவர்கள் செல்லும் நாடுகளில் சொந்தமாக வாகனங்களை ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள்.

ADVERTISEMENT

அவ்வாறான IDL உரிமத்தை அங்கீகரிக்கும் பல நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும் என்பதால், அமீரகத்திற்கு வருபவர்கள் IDL வைத்திருந்தால் நாட்டிற்குள் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்டலாம். அதே போன்று, UAE டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்கும் எமிராட்டிஸ் மற்றும் வெளிநாட்டவர்கள் 200 திர்ஹம்களுக்கும் குறைவான செலவில் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பெற முடியும். அதை வைத்து பிற நாடுகளில் சொந்தமாக வாகனத்தையும் ஓட்டலாம்.

அதேசமயம், சுற்றுலாப் பயணிகள் மற்றும் விசிட் விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தில் IDL-ஐப் பெற முடியாது, அவர்கள் அமீரகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அதை தங்கள் தாய் நாடுகளில் இருந்து மட்டுமே பெற வேண்டும். அதாவது, நீங்கள் அமீரகத்திற்கு சுற்றுலாப்பயணியாக வருகின்ற பட்சத்தில், அமீரகத்திற்குள் வாகனம் ஓட்டுவதற்கு சொந்த நாட்டில் வழங்கப்பட்ட IDL ஐ வைத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இது குறித்து துபாய் RTA அளித்துள்ள தகவல்களின் படி, உங்களுக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வழங்கிய நாட்டைத் தவிர அனைத்து நாடுகளிலும் இந்த IDL ஐ நீங்கள் பயன்படுத்தலாம். எனினும், தற்காலிகமாக வழங்கப்பட்ட லைசென்ஸ் மற்றும் இடைக்கால லைசன்ஸ்களுக்கு IDL வழங்கப்பட மாட்டாது என்பதையும் RTA தெரிவித்துள்ளது.

IDL வைத்திருப்பவர்கள் எந்த வாகனங்களை ஓட்டலாம்?

RTA இணையதளத்தின் படி, செல்லுபடியாகும் IDL வைத்திருக்கும் சுற்றுலாவாசிகள் ஒரு காரை வாடகைக்கோ அல்லது அவர்களின் முதல்-நிலை உறவினர்களில் ஒருவருக்கு பதிவுசெய்யப்பட்ட காரையோ ஓட்டுவதற்கு அனுமதி உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இலகுரக வாகனம் (light vehicle) மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை அவர்கள் இங்கே ஓட்டலாம்.

ADVERTISEMENT

கூடுதலாக, UAE வழியாக வேறு நாடுகளுக்கு பயணிக்கும் டிரான்சிட் விசா வைத்திருப்பவர்கள் கூட, செல்லுபடியாகும் IDL மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்புதல் பெற்றிருந்தால் இங்கு வாகனத்தை ஓட்டலாம் என்றும் RTA தெரிவித்துள்ளது. இருப்பினும் இது குறித்து UAE ஆட்டோமொபைல் மற்றும் டூரிங் கிளப் கூறுகையில், UAE வரும் சுற்றுலா பயணிகள் வாடகை வாகனங்களை மட்டுமே ஓட்ட அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எத்தனை நாடுகளில் IDLஐ பயன்படுத்தலாம்?

RTA அறிவிப்பின் படி, நீங்கள் ஒரே ஒரு சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வைத்துக்கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சொந்தமாகவே அனுமதிக்கப்பட்ட வாகனங்களை ஓட்டலாம்.

IDL-இன் பயன்கள் என்ன?

ஓட்டுநர் அவர்கள் வசிக்கும் நாட்டில் செல்லுபடியாகும் உரிமம் வைத்திருப்பதை IDL நிரூபிக்கும் என்பது முக்கியப் பயன்பாடு ஆகும். உதாரணமாக, வெளிநாட்டில் வாகனம் விபத்துக்குள்ளானால் அல்லது பாஸ்போர்ட் போன்ற சட்டப்பூர்வ அடையாளத்தை இழந்தால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க இது உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.