ADVERTISEMENT

UAE: அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து..!! விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த தீயணைப்பு குழுவினர்..

Published: 27 Jun 2023, 10:04 AM |
Updated: 27 Jun 2023, 11:34 AM |
Posted By: admin

அஜ்மானில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்டதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து வெளயிடப்பட்ட தகவலில் அஜ்மான் ஒன் காம்ப்ளக்ஸின் டவர் 02 இல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த சிவில் பாதுகாப்பு மற்றும் காவல்துறை குழுக்கள் விரைந்து வந்ததுடன் அவர்களின் தீவிர முயற்சியால் வெற்றிகரமாக தீயை கட்டுப்படுத்தி அணைக்க முடிந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தீவிபத்தினால் காயங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜ்மான் காவல்துறையின் தலைமை இயக்குநரான பிரிகேடியர் அப்துல்லா சைஃப் அல் மத்ரூஷி இது பற்றி கூறுகையில், விபத்து நடந்த இடத்திற்கு ஒரு நடமாடும் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது என்றும், இது குடியிருப்பாளர்கள் தங்கள் பொருட்களை இழந்ததைப் புகாரளிக்க சான்றிதழ்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை வழங்கியது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு உதவி செய்ய மற்றும் பாதுகாப்புக்கென ஒரு மொபைல் நிலையமும் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

View this post on Instagram

 

A post shared by شرطة عجمان (@ajmanpoliceghq)

அதன்பின் தீவிபத்து ஏற்பட்ட டவர் 02 ல் வசித்து வந்த குடியிருப்பாளர்களை அஜ்மான் மற்றும் ஷார்ஜாவில் உள்ள ஹோட்டல்களுக்கு குடியிருப்பாளர்களை ஏற்றிச் செல்வதற்காக ரெட் கிரஸெண்ட் அமைப்பின் ஒத்துழைப்புடன் எமிரேட்டின் போக்குவரத்து ஆணையத்தால் ஏழு பேருந்துகள் வழங்கப்பட்டன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

View this post on Instagram

 

A post shared by شرطة عجمان (@ajmanpoliceghq)