ADVERTISEMENT

வாகனங்களுக்கு பார்க்கிங் இலவசம்.. டோல் கேட் கட்டணமும் இல்லை.. ஈத் விடுமுறையை முன்னிட்டு அபுதாபி அறிவிப்பு..!!

Published: 26 Jun 2023, 6:37 PM |
Updated: 26 Jun 2023, 6:46 PM |
Posted By: admin

அமீரகத்தில் ஈத் அல் அதா விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அபுதாபியில் வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங் மற்றும் டோல் கேட் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் அல் அதா விடுமுறையின் நான்கு நாட்களுக்கும் பார்க்கிங் கட்டணம் மற்றும் டோல் கட்டணங்கள் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமானது “MAWAQiF பார்க்கிங் கட்டணம் செவ்வாய்க்கிழமை, ஜூன் 27, 2023 முதல், ஜூலை 1, 2023 சனிக்கிழமை காலை 7:59 மணி வரை இலவசமாக இருக்கும். மேலும், Musaffah M-18 டிரக் பார்க்கிங் லாட்டில் பார்க்கிங் கட்டணமும் இலவசம். ஈத் விடுமுறை முடிந்த பின் கட்டணம் வசூலிக்கப்படும்” என்று அறிவித்துள்ளது.

மேலும் ITC வாகனம் ஓட்டுபவர்களை குறிப்பிட்ட வாகன நிறுத்துமிடங்களில் சரியாக நிறுத்தவும், இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை குடியிருப்பு பார்க்கிங் பகுதியில் (residential parking) வாகனம் நிறுத்துவதை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் ஜூலை 1, சனிக்கிழமை முதல், போக்குவரத்து அதிகமுள்ள பீக் நேரங்களில் (காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை) டார்ப் டோல் கேட் கட்டணங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதே போல் அபுதாபி முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மையங்கள் விடுமுறை நாட்களில் மூடப்பட்டு, திங்கட்கிழமை வழக்கமான வேலை நேரத்தைத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், விடுமுறை நாட்களில் தேவைக்கு ஏற்ப பிராந்திய பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பொதுப் பேருந்துகள் வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, ITC ஆனது, தனியார் துறையைச் சேர்ந்த ஆபரேட்டர்களுடன் ஒருங்கிணைந்து, நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும், அபுதாபி எக்ஸ்பிரஸ் மற்றும் அபுதாபி இணைப்பு பேருந்து சேவைகள் (Abudhabi link bus services) ஈத் விடுமுறை நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பேருந்துகள், பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் ITC இன் சேவைகளின் சேவை நேரத்தைப் பார்க்க, www.itc.gov.ae ஐப் பார்வையிடலாம் அல்லது நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் சேவை ஆதரவு மையத்தை 800850 என்ற கட்டணமில்லா எண்ணில் அல்லது Darbi ஸ்மார்ட் ஆப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ITC சேவைகளை ‘TAMM’ தளம் மூலம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் 24/7 என எல்லா நேரங்களிலும் டாக்ஸி கால் சென்டரை 600535353 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.