ADVERTISEMENT

துபாய் மாலில் வெறும் 50 Fills க்கு சூப்பரான karak chai.. எங்கனு தெரியுமா..?

Published: 9 Jun 2023, 2:04 PM |
Updated: 9 Jun 2023, 2:08 PM |
Posted By: admin

இந்திய தேநீரின் பாரம்பரிய மாறுபாடான ‘காரக் சாய் (karak tea)’ ஆனது ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். இந்த வகை தேநீரை பெரும்பாலும் எமிராட்டியர்கள், இந்தியர்கள், பிற ஆசிய நாட்டவர்கள் மற்றும் பிற நாட்டைச் சேர்ந்த அரேபியர்கள் என அனைவரும் காலை, மாலை என மட்டும் அல்லாமல் பகல் நேரங்களிலும் விரும்பி பருகுகிறார்கள்.

ADVERTISEMENT

அதாவது, அமீரக நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் மத்தியில் காரக் சாய்-யின் மோகம் எந்த அளவிற்கு உள்ளது என்றால், அமீரகத்தில் குளிர் பானங்கள், ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை விற்பனை செய்யும் பல கஃபேக்கள் மற்ற பானங்களை விட கராக் சாய் விற்பனை செய்வதன் மூலம் அதிக பணம் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளன.

பல வருடங்களாக அமீரகத்தில் 1 திர்ஹம்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த காரக் சாய் விலையை, கடந்த ஆண்டு பெரும்பாலான கஃபேக்கள் 1 திர்ஹம்களில் இருந்து 1.50 திர்ஹம்களாக உயர்த்தியுள்ளன. அப்படியிருக்க, நம்மில் மிகவும் பிரபலமான இந்த காரக் சாய்யை நீங்கள் வெறும் 50 Fills (0.5 திர்ஹம்) க்கு சுவைக்க முடியும். அதுவும் ஆடம்பர பிராண்டுகளின் அடையாளமாய் திகழும் துபாய் மாலில் என்றால் நம்ப முடிகிறதா.. ஆம், அங்குள்ள ஒரு உணவகம் இந்த பிரபலமான சாயை வெறும் 0.50 திர்ஹம்களுக்கு விற்பனை செய்கிறது.

ADVERTISEMENT

துபாய் மாலின் முதல் தளத்தில் அமைந்துள்ள ஆடம்பரமான எமிராட்டி மற்றும் அரபு உணவு வகைகளை வழங்கும் அனா உணவகம் (Ana Restaurant) இந்த காரக் சாயை 50 ஃபில்ஸ்களுக்கு விநியோக்கிக்கிறது. இந்த உணவகம் புனித ரமலான் மாதத்தில் இவ்வளவு மலிவான விலைக்கு விற்பனை செய்ய ஆரம்பித்த போது, வாடிக்கையாளர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அதன்மூலம் குடியிருப்பாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்த உணவகம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, துபாய் மாலுக்கு செல்லும் தினமும் நூற்றுகணக்கான ஆசிய, எமிராட்டி மற்றும் அரேபிய வாடிக்கையாளர்கள் இங்கு சென்று காரக் சாய் சுவைப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, காரக் சாய் பிரியர்களுக்கு இங்கு பார்சல் சர்வீஸ் மட்டுமே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.