ADVERTISEMENT

அமீரக-ஓமான் எல்லை பகுதியில் நேற்று ஏற்பட்ட நில அதிர்வு..!! தேசிய வானிலை மையம் தகவல்..!!

Published: 8 Jun 2023, 6:02 AM |
Updated: 8 Jun 2023, 8:08 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய அல் ஃபாய் எனும் பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு 2.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கண்டறியப்பட்டது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது  ஐக்கிய அரபு அமீரகம்-ஓமான் எல்லை பகுதியில் இரவு 11.29 மணியளவில் இந்த சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மையம் மேலும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் அவ்வப்போது ஏ்றபடும் இத்தகைய சிறி அளவிலான நிலநடுக்கங்கள் குறத்து குடியிருப்பாளர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று நில அதிர்வு நிபுணர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல் NCM-ன் நிலநடுக்கவியல் துறையின் இயக்குனர் கலீஃபா அல் எப்ரி சமீபத்தில் “அமீரகத்தில் குறைந்த அளவிலிருந்து மிதமான அளவிலான நில அதிர்வு அவ்வப்போது ஏற்படுகிறது. அதன்படி அமீரகத்தில் ஒரு வருடத்தில் இரண்டு முதல் மூன்று வரை அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. மக்கள் இந்த நடுக்கங்களை அதிகம் உணர்வதில்லை, அவை சென்சார்கள் மூலம் கண்டறியப்படுகின்றன. இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் கட்டிடங்கள் அல்லது உள்கட்டமைப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே குடியிருப்பாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை” என்றும் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT