ADVERTISEMENT

ஓமானிலும் தென்பட்ட துல் ஹஜ் பிறை.. ஈத் அல் அதா நாட்களை அறிவித்த ஓமான்..!!

Published: 18 Jun 2023, 9:06 PM |
Updated: 18 Jun 2023, 9:23 PM |
Posted By: admin

ஓமானில் இருக்கக்கூடிய இஸ்லாமிய அறநிலையத்துறை மற்றும் மத விவகார அமைச்சகம் (MERA) இன்று (ஞாயிற்றுக்கிழமை) இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாத தொடக்கத்தைக் குறிக்கும் பிறையை பார்த்ததாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஜூன் 28 புதன்கிழமை ஈத் அல் அதாவின் முதல் நாளாக இருக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் வரும் ஜூன் 27 ம் நாள் அரஃபா நாள் எனவும் கூறப்பட்டுள்ளது. இதே போல் சவூதி அரேபியாவும் துல் ஹஜ் மாத பிறை இன்று பார்க்கப்பட்டதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.