வளைகுடா செய்திகள்

முதன்முறையாக சவுதி வானில் பரந்த ‘ரியாத் ஏர்’ விமானம்!! – 100 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சேவை வழங்க இலக்கு..!!

சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் அவர்களால் கடந்த ஆண்டு, தலைநகர் ரியாத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏவியேஷன் நிறுவனமான ரியாத் ஏர், கடந்த திங்கட்கிழமையன்று அதன் தனித்துவமான விமானத்தை தலைநகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்பெற செய்துள்ளது.

குறிப்பாக எதிர்வரும் ஜூன் 19 அன்று நடைபெறவுள்ள 54 வது பாரிஸ் விமான கண்காட்சியில் இந்த விதாமனத்தை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, ரியாத் ஏர் போயிங் 787-9 ட்ரீம்லைனர் வகையை சேரந்த இந்த விமானத்தை ரியாத்தின் முக்கிய நகரங்கள் மீது பறக்கச் செய்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளது.

ரியாத் ஏர் விமானத்தின் இந்த அறிமுக விழாவில் உயரதிகாரிகள், பிரமுகர்கள் மற்றும் உத்தியோகபூர்வ பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், KAFD, Boulevard நகரம் மற்றும் சில முக்கிய கட்டிடங்கள் உட்பட ரியாத்தில் உள்ள பல குறிப்பிடத்தக்க அடையாளங்களின் மேல் இந்த ரியாத் ஏர் விமானம் குறைந்த உயரத்தில் பறந்துள்ளது.

இது குறித்து ரியாத் ஏர் விமான நிறுவனத்தின் CEO டோனி டக்ளஸ் கூறுகையில், இது அனைவருக்கும் முக்கியமான நாள் மற்றும் வரலாற்றில் ஒரு சிறப்பு தருணம் என்று கூறியுள்ளார். மேலும், இந்தாண்டின் பிற்பகுதியில் அதன் இரண்டாவது விமானத்தை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விமானம் முழுவதும் கண்கவர் லாவண்டர் வண்ணத்தில் வண்ணம் தீட்டப்பட்டு, விமானத்தின் உடற்பகுதியில்  ‘The Future Takes Flight’ என்ற உலகளாவிய பிரச்சார டேக்லைன் எழுதப்பட்டுள்ளது. அத்துடன், உடற்பகுதியில் அரபு எழுத்துக்களும் கூடவே இடம்பெற்றுள்ளன.

சவுதியில் ஏற்கனவே பயண்பாட்டில் இருக்கும் சவுதியா ஏர்லைன்ஸிற்கு அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சவுதியின் புதிய விமான நிறுவனமான ரியாத் ஏர், ​​அதன் தலைநகரான ரியாத்தில் இருந்து உலகெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விமான போக்குவரத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!