ADVERTISEMENT

ஈத் அல் அதாவை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்த ஷார்ஜா..!! எப்போது முதல்..??

Published: 27 Jun 2023, 9:46 AM |
Updated: 27 Jun 2023, 9:57 AM |
Posted By: admin

ஷார்ஜாவில் வசிக்கும் வாகன ஓட்டிகள் வரவிருக்கும் ஈத் அல் அதாவை முன்னிட்டு தங்களது வாகனங்களை இலவசமாக பார்க்கிங்கை செய்து கொள்ளலாம் என்று ஷார்ஜா நகராட்சி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதாவது ஜூன் 28 புதன்கிழமை முதல் ஜூன் 30 வெள்ளிக்கிழமை வரை இந்த இலவச பார்க்கிங் பொருந்தும் என்று முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. அத்துடன் ஜூலை 1 சனிக்கிழமை முதல் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் விளக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வெள்ளிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட 7 நாள் கட்டண வாகன நிறுத்துமிடங்களுக்கு இந்த இலவச பார்க்கிங் பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங் இடங்களை நீல நிற பார்க்கிங் தகவல் பலகைகள் மூலம் அடையாளம் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு இன்று, செவ்வாய்க்கிழமை முதல் ஈத் அல் அதாவை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுவே சனி-ஞாயிறு வார இறுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு, இது ஆறு நாள் விடுமுறையாகும் மாறும். அவர்கள் மீண்டும் ஜூலை 3 திங்கட்கிழமை முதல் பணிக்கு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.