அமீரக செய்திகள்

பொதுத்துறை ஊழியர்களுக்கு ‘ஈத் அல் அதா’ விடுமுறை நாட்களை அறிவித்த அமீரகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் பொதுத் துறை ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ ஈத் அல் அதா விடுமுறையை அமீரக அரசு அறிவித்துள்ளது. மனித வளங்களுக்கான ஃபெடரல் அத்தாரிட்டியின் (FAHR) படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஈத் அல் அதா விடுமுறைகள் அரேபிய காலண்டரான ஹிஜ்ரியின் ஜுல் ஹஜ் 9 முதல் 12 (1444 AH) வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா விடுமுறைக்காக குடியிருப்பாளர்கள் ஐந்து நாள் அல்லது ஆறு நாள் வார இறுதியை அனுபவிக்கலாம். இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் மாதங்களின் தொடக்கத்தையும் முடிவையும் தீர்மானிக்கும் சந்திரனின் பார்வையைப் பொறுத்து  இந்த கால அளவு இருக்கும்.

கிரிகோரியன் நாட்காட்டியின்படி, தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஈத் அல் அதா பண்டிகையானது, ஜூன் 27 செவ்வாய்க்கிழமை முதல் ஜூலை 2 ஞாயிற்றுக்கிழமை வரை (வார இறுதி நாள் உட்பட) கொண்டாடப்படும். இஸ்லாமிய நாட்காட்டி சந்திர அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், ஜூன் மாதத்தின் மூனரறாவது வாரத்தில் ஜுல் ஹஜ் நிலவு காணப்பட்டவுடன் ஆங்கில மாதத்திற்கான தேதிகள் உறுதிப்படுத்தப்படும்.

2023 ஆம் ஆண்டிற்கான நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ விடுமுறை நிகழ்ச்சி நிரல் தொடர்பான அமைச்சர்கள் குழுவின் முடிவைத் தொடர்ந்து மனித வளங்களுக்கான ஃபெடரல் ஆணையத்தின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!