ADVERTISEMENT

ஈத் அல் அதா: 988 சிறைகைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்ட அமீரக அதிபர்..!!

Published: 22 Jun 2023, 8:41 AM |
Updated: 22 Jun 2023, 9:00 AM |
Posted By: admin

இந்த ஆண்டு ஈத் அல் அதாவைக் கொண்டாட நாடு முழுவதும் உள்ள குடியிருப்பாளர்கள் தயாராகி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் ஈத் அல் அதாவை முன்னிட்டு 988 கைதிகளை இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீ்ரகத்தின் ஒவ்வொரு எமிரேட்டின் ஆட்சியாளர்களும் குறிப்பிடத்தக்க இஸ்லாமிய நிகழ்வுகளின் போது கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது பொதுவான நடைமுறையாகும்.

இந்நிலையில் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் மன்னிப்பு, விடுதலை செய்யப்பட்ட கைதிகளுக்கு அவர்களின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் சேவைக்கு சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கும், வெற்றிகரமான சமூக மற்றும் தொழில்முறை வாழ்க்கையை நடத்துவதற்கும் வாய்ப்பளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT