ADVERTISEMENT

UAE: விசிட் விசாவை 30 நாட்களுக்கு நீட்டிக்க செலவு எவ்வளவு.? விண்ணப்பிப்பது எப்படி.? முழுவிபரங்களும்..!!

Published: 6 Jun 2023, 6:42 PM |
Updated: 7 Jun 2023, 10:34 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்போது சுற்றுலா விசாவில் இருப்பவர்களா நீங்கள்..?? அமீரகத்தில் தங்கும் காலத்தை நீட்டிக்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், கூடுதலாக 30 நாட்கள் வரை நுழைவு அனுமதி எனும் என்ட்ரி பெர்மிட்டை நீட்டிக்க தற்போது விண்ணப்பிக்க முடியும்.

ADVERTISEMENT

அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் (ICP) கடந்த ஜூன் 4 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, தங்கள் அதிகாரப்பூர்வ சேவை தளமான smartservices.icp.gov.ae. மூலம் எவ்வாறு நுழைவு அனுமதிகளை நீட்டிப்பது என்பது குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா அல்லது ஃபுஜைரா ஆகிய எமிரேட்டுகளின் சுற்றுலா விசாவை வைத்திருப்பவர்கள் ICP மூலமும் அதேசமயம், துபாய் எமிரேட்டின் சுற்றுலா விசாவை வைத்திருப்பவர்கள் GDRFA மூலமும் விசாவை நீட்டிப்பதற்காக விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

ICP மூலம் என்ட்ரி பெர்மிட்டை நீட்டித்தல்:

ICPஇன் படி, உங்களது நுழைவு அனுமதியை நீட்டிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சுற்றுலா நிறுவனங்களால் மட்டுமே செய்ய முடியும். இதற்கு, நீங்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டின் நகலை வைத்திருக்க வேண்டும். அத்துடன் சுற்றுலா விசாவை நீட்டிக்க விரும்புபவர்கள் 30 நாட்களுக்கு இரண்டு முறை விசாவை நீட்டிக்கலாம் என்றும் ICP தெரிவித்துள்ளது.

அதன்படி, பின்வரும் மூன்று வகையான நுழைவு அனுமதிகளை 30 நாட்களுக்கு இருமுறை நீட்டிக்கலாம். அவை:

ADVERTISEMENT
  • நுழைவு அனுமதி நீட்டிப்பு (டூரிஸ்ட்
  • விசா)நுழைவு அனுமதி நீட்டிப்பு (விசிட் விசா)
  • வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளின் குடியிருப்பாளர்களுக்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு

விசா நீட்டிப்பைப் பெற எவ்வளவு நேரம் ஆகும்?

உங்களது நுழைவு அனுமதி நீட்டிப்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இ-நுழைவு அனுமதி வழங்கப்படும் (e-Entry Permit) என்று ICP இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செலவு:

  • கோரிக்கை கட்டணம் (Request fee): 100 திர்ஹம்
  • வழங்கல் கட்டணம் (Issuance fee): 500 திர்ஹம்
  • இ-சேவைக் கட்டணம் (e-Service fee): 10 திர்ஹம்

இதன் மூலம் உங்கள் என்ட்ரி பெர்மிட்டை நீட்டிக்க ஏறத்தாழ 600திர்ஹம் செலவாகும் என்பது தெரியவந்துள்ளது.

GDRFA – துபாய் மூலம் என்ட்ரி பெர்மிட்டை நீட்டித்தல்:

>> GDRFA இணையதளமான https://gdrfad.gov.ae/ இன் படி, துபாய் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களின் விசா நீட்டிப்புக்கு துபாயில் உள்ள அங்கீகாரம் பெற்ற சுற்றுலா அலுவலகங்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

>> இந்த சேவையைப் பெற செல்லுபடியாகும் சுற்றுலா விசா நகலை வழங்க வேண்டும் என்று GDRFA இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 120 நாட்கள் வரை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை வழங்குதல் அத்தாரிட்டியின் முடிவால் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

செலவு:

  • விசா நீட்டிப்புக் கட்டணம்: 600 திர்ஹம், அத்துடன் ஐந்து சதவீத மதிப்பு கூட்டப்பட்ட வரி (Value Added Tax – VAT)
  • கூடுதல் கட்டணம் (ஸ்பான்சர் செய்யப்பட்ட நபர் நாட்டிற்குள் இருந்தால்): Knowledge fee 10 திர்ஹம் மற்றும் Innovation fee 10 திர்ஹம்

ஒட்டு மொத்தமாக 620 திர்ஹம் வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், விசாவின் மொத்த செலவானது ஸ்பான்சர் செய்யப்பட்ட நபரைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது அதற்குத் தேவைப்படும் வேறு ஏதேனும் காரணங்களுக்காக மாறுபடலாம் என்று GDRFA இணையதளம் தெரிவித்துள்ளது.