வளைகுடா செய்திகள்

உலகளவில் ஊழியர்களின் சராசரி சம்பளம் வெளியீட்டில் கத்தார், அமீரகம் முன்னணி.. !!

ஊழியர்களுக்கு வழங்கப்படும் சராசரி ஊதியத்தின் அடிப்படையில், கத்தார் நாடானது அரபு நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தையும் மற்றும் உலகளவில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது என்று ஆன்லைன் தரவுத்தள புள்ளியியல் இணையதளமான Numbeo வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கத்தார் மட்டுமல்லாமல் மேலும் 12 அரபு நாடுகள் முதல் 100 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சுவிட்சர்லாந்து $6,186.01  என்ற சராசரி சம்பளத்துடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் லக்சம்பர்க் $5,180.70 சராசரி சம்பளத்துடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது, சிங்கப்பூர் $5,032.35 சராசரி சம்பளத்துடன் 3வது இடத்தையும் $4,658.96 சராசரி சம்பளத்துடன் அமெரிக்கா 4வது இடத்தையும் பிடித்துள்ளன. ஐஸ்லாந்து $4,259.03 என்று சராசரி சம்பளத்துடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த பட்டியலில் கத்தார் $4,130.45 சராசரி சம்பளத்துடன் உலகளவில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது, அதே சமயம் ஐக்கிய அரபு அமீரகமானது $3,581.87 என்ற சராசரி சம்பளத்துடன் 7வது இடத்தில் உள்ளது, டென்மார்க் $3,539.42 சராசரி சம்பளத்துடன் 8வது இடத்தைப் பிடித்தது, நெதர்லாந்து $3,521.84 சம்பளத்துடன் ஒன்பதாவது இடத்தையும் மற்றும் ஆஸ்திரேலியா $3,362.47 சராசரி சம்பளத்துடன் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அரபு நாடுகளை பொறுத்தவரை தரவரிசை பட்டியலில் கத்தார் மற்றும் அமீரகம் முறையே உலக அளவில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. குவைத் நாடானது அரபு நாட்டில் மூன்றாவது இடத்தையும் மற்றும் உலக அளவில் 22வது இடத்திலும் உள்ளன. ஓமான் நாடானது அரபு நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் மற்றும் உலக அளவில் 27 வது இடத்தையும் பிடித்துள்ளது.

மற்ற நாடுகளைப் பொறுத்தவரை, இந்தியா $584.08 சராசரி சம்பளத்துடன் 63வது இடத்தில் உள்ளது மற்றும் ஃபிலிப்பைன்ஸ் $310.15 சராசரி சம்பளத்துடன் 89வது இடத்திலும் உள்ளது. மேலும் வங்காளதேசம் ($256.96) 94வது இடத்திலும், நேபாளம் ($209.35) 95 வது இடத்திலும், இலங்கை ($197.96) 96 வது இடத்திலும் மற்றும் பாகிஸ்தான்($161.00) 98 வது இடத்தையும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!