ADVERTISEMENT

உலகிலேயே அதிகம் உணவு உண்ணும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த வளைகுடா நாடு..!!

Published: 30 Jul 2023, 1:29 PM |
Updated: 30 Jul 2023, 1:47 PM |
Posted By: admin

தனிநபர் உண்ணும் உணவின் அடிப்படையில், எந்த நாட்டு மக்கள் அதிக அளவு உணவினை எடுத்துக் கொள்கின்றார்கள் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட புள்ளி விவரங்களை மானிட்டர் இணையதளம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது “எவர் வேர்ல்ட் இன் டேட்டா” (Our World in Data) என்ற தலைப்பின் கீழ் இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த புள்ளி விவரங்களின் படி, தனிநபர் உணவு நுகர்வில் பஹ்ரைன் நாடு முதலிடத்தில் உள்ளது. அது மட்டுமல்லாமல், சராசரியாக மனிதர்கள் தினமும் உட்கொள்ளும் உணவானது 4,000 கிலோகலோரிக்கும் அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு முதலிடத்தை அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆக்கிரமித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சராசரி கலோரி நுகர்வு அடிப்படையில் குவைத் உலகில் 33வது இடத்திலும், அரபு நாடுகளை பொறுத்தவரை ஐந்தாவது இடத்திலும், வளைகுடா நாடுகளை பொறுத்தவரை இரண்டாவது இடத்திலும் உள்ளது. குவைத் நாட்டின் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 3,387 கிலோகலோரிகள் உணவினை எடுத்துக் கொள்கின்றனர் என கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் வரிசையில் துருக்கி உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும், துருக்கிய மக்கள்தொகையில் 35 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றது. இதனால் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்ப்படுவதோடு அல்லாமல் மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட தினசரி சராசரி உணவின் அளவானச 2,000 கிலோகலோரியுடன் ஒப்பிடும்போது, ​​ ஏமன் தினசரி கலோரிகளின் சராசரி நுகர்வு 1,957 கிலோகலோரியுடன் உலகில் 180வது இடத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தரவுகளின் அடிப்படையில் இந்த குறியீடு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

உலகிலேயே தனிநபர் குறைந்த கலோரிகளை உட்கொள்ளும் நாடு என்ற பட்டியலில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு கடைசி இடத்தில் உள்ளது. மேலும், சூடான், சிரியா, ஜோர்டான் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் மிகக் குறைந்த தரவரிசையில் உள்ள நிலையில், பெரும்பாலான அரபு நாடுகளும் குறைந்த தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.