ADVERTISEMENT

இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு பொது விடுமுறையை அறிவித்துள்ள அமீரகம்..!!

Published: 12 Jul 2023, 2:51 PM |
Updated: 12 Jul 2023, 3:06 PM |
Posted By: admin

இன்னும் ஒரு சில நாட்களில் துவங்கவிருக்கும் இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை தேதியை ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரவிருக்கும் ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை 21 வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தனியார் துறை ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு போன்றே பொது விடுமுறை வழங்கப்பட்டு வருவதால் அவர்களுக்கும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையும் அதே போல் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களில் சனி, ஞாயிறு விடுமுறை கொண்டவர்களுக்கும் தொடர் மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT