வரவிருக்கும் இஸ்லாமிய புத்தாண்டான புதிய ஹிஜ்ரி வருடம் துவங்கவிருப்பதை முன்னிட்டு ஓமான் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 20, 2023 வியாழக்கிழமை நாட்டில் உள்ள பொது மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை என்று ஓமான் செய்தி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில் “ஜூலை 20 வியாழன் அன்று, பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, புதிய ஹிஜ்ரி ஆண்டு 1445 துவங்கவிருப்பதை முன்னிட்டு அதிகாரப்பூர்வ விடுமுறை அளிக்கப்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.