அமீரக செய்திகள்

உலகளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் நாடுகளின் பட்டியல் வெளியீடு.. UAE, இந்தியா மற்றும் அரபு நாடுகள் எத்தனையாவது இடங்கள்.?

உலகளவில் அதிகம் தங்கம் வாங்கும் நாடுகளின் பட்டியலை “Insider Monkey” என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியா மற்றும் அரபு நாடுகள் முன்னிலையில் இருப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது. அதில் அரபு நாடுகளில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் உலகளவில் தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் 20 இடங்களில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஒரு வருடத்திற்கு, நாடுகளானது எவ்வளவு தங்கத்தை உபயோகிக்கின்றன, தங்கத்திற்கான நாட்டின் வருடாந்திர தேவை ஆகிய அளவுகளை வைத்து உலகில் தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் 20 நாடுகளை வரிசைப்படுத்தியதாக Insider Monkey நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளான சீனாவும், இந்தியாவும் முன்னிலையில் உள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

தங்க நுகர்வில் அரபு நாடுகள்:

அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியா ஆண்டிற்கு சராசரியாக 220 மெட்ரிக் டன் தங்கத்தினை உபயோகித்து தங்க நுகர்வில் அரபு நாடுகளில் முதலிடத்திலும், உலகளவில் நான்காவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகம் 39.8 மெட்ரிக் டன் சராசரி தங்க நுகர்வுடன், அரபு நாடுகளில் இரண்டாம் இடத்திலும், உலகளவில் 13வது இடத்திலும் உள்ளது. மேலும் எகிப்து நாடானது சராசரியாக 31.8 மெட்ரிக் டன் நுகர்வுடன், அரபு நாடுகளில் மூன்றாம் இடத்திலும், உலகளவில் 16வது இடத்திலும் உள்ளது.

இந்த பட்டியலில் குவைத் நாடானது அரபு நாடுகளில் மூன்றாம் இடத்தையும், உலகில் 19வது இடத்தையும் பிடித்துள்ளது. குவைத் நாடு ஒரு ஆண்டிற்கு வாங்கும் தங்கத்தின் அளவு 16.16 மெட்ரிக் டன்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குவைத் நாட்டில் சராசரியாக ஒரு நபர் ஒரு ஆண்டிற்கு வாங்கும் தங்கத்தின் அளவு 3.8 கிராம் எனவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றது.

அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளில் குவைத் நாட்டினர் தங்கத்தை வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர் என்பதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ஏனெனில் குவைத்தில் சராசரி தங்க நுகர்வு 2022 இல் 16.6 மெட்ரிக் டன் எனவும், 2021 இல் 8.9 மெட்ரிக் டன் எனவும், 2020 இல் 13 மெட்ரிக் டன் எனவும் பதிவாகியுள்ளது. இது தங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தினை காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

மிகப்பெரிய தங்க நுகர்வோர்:

அரபு நாடுகளை தவிர்த்து தங்கத்தை அதிகமாக வாங்கும் உலகின் மிகப்பெரிய நுகர்வோர்களின் பட்டியலும் வெளிவந்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் தரவுகளின்படி, 2010 ஆம் ஆண்டில் சீனாவும், இந்தியாவும் கடந்த பத்து ஆண்டுகளாக தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோர்களாக இருந்து வருகின்றன. மேலும் இந்த இரு நாடுகளும் முறையே 824.9 மற்றும் 774 மெட்ரிக் டன்களை பெற்று 2022 ஆம் ஆண்டிலும் இந்த நிலையைத் தக்கவைத்துள்ளன.

சீனா மற்றும் இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, சவுதி அரேபியா, ஜெர்மனி, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் முறையே மூன்று முதல் ஏழு இடங்களை பிடித்துள்ளன. தொற்று நோய்க்கு பிறகு 2022 ஆம் ஆண்டில் தங்கத்திற்கான உலகளாவிய தேவை 3,303 மெட்ரிக் டன்களை எட்டியிருப்பது தங்க நுகர்வுக்கான எழுச்சியை காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டில், உலகில் தங்கத்தின் மொத்த நுகர்வு 2,301 மெட்ரிக் டன்களாகக் குறைந்து காணப்பட்டுள்ளது. மேலும், இது 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது மிக குறைந்த அளவாகும் என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றது. எனினும், கொரோனா நோய் பரவலுக்கு பின்பு தற்பொழுது இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ள நிலையில் உலக நாடுகளின் கையிருப்பு தங்கம் அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!