ADVERTISEMENT

அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் 24 மணி நேரமும் தூதரக உதவிகளைப் பெறும் வசதி அறிமுகம்..!! எப்படி உதவியைப் பெறுவது என்பது பற்றிய விபரங்கள் இங்கே…

Published: 23 Jul 2023, 12:24 PM |
Updated: 23 Jul 2023, 1:11 PM |
Posted By: admin

அமீரகத்தில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த குடியிருப்பாளர்கள் இப்போது, துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் (Consulate General of India – CGI) இணையதளம் வழியாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சாட்போட் (chatbot) மூலம் அவர்களது சிக்கல்களுக்கு தூதரக உதவிகளைப் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகவாழ் இந்தியர்களின் வசதிக்காக புதிய அம்சங்களுடன் 24×7 நேர ஹெல்ப் டெஸ்க்கை இயக்குகின்ற வெளிநாட்டவர் நல முயற்சியான பிரவாசி பாரதிய சஹாயதா கேந்திராவின் (PBSK) செயல்பாடுகளை மறுசீரமைக்க இருப்பதாக கடந்த புதன்கிழமையன்று இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இது துபாயில் உள்ள இந்தியர்களுக்கான தூதரக சேவைகள் மற்றும் ஆதரவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பரேஷன் என்றும், PBSK நவம்பர் 1, 2020 அன்று துபாயில் உள்ள CGI வளாகத்திற்கு இடம் மாற்றப்பட்டதில் இருந்து வழக்குகள் அதிகரித்து வருவதால், வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வசதி இருக்கும் என்றும் துணைத் தூதரகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பங்கு வகிக்கும் இந்திய சமூகத்தினர், தாங்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகாண PBSK உடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 3,500 அழைப்புகள், உடனடி செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் வாக்-இன்கள் பதிவு செய்யப்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் PBSK இன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த முன்னணி இந்திய வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (Customer Relationship Management – CRM) வழங்குனரான Zoho கார்ப்பரேஷனுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் தூதரகம் கூறியுள்ளது. மேலும் இது தூதரக சேவைகளை நாடும் இந்திய சமூகத்தினரின் அனுபவத்தை மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

உதவியைப் பெறுவது எப்படி?

தூதரக சேவைகள் தேவைப்படும் இந்திய சமூக உறுப்பினர்களுக்கு PBSK, 24 மணிநேரமும் 365 நாட்களும் சேவையை வழங்குகிறது. ஆகவே, உதவியை நாடுபவர்கள் நாட்டில் உள்ள இலவச தொலைபேசி எண்: 800 46342 மூலம் PBSK உதவி மையத்தை அணுகலாம். அல்லது CGI, துபாய் இணையதளத்தில் சாட்போட்டை அணுகலாம்.

ஆன்லைன் சந்திப்பு முன்பதிவு:

பயனர்கள் இலவச சட்ட மற்றும் உளவியல் ஆலோசனை சேவைகளுக்கான சந்திப்புகளை முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் அமைப்பும் தூதரகத்தின் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, சட்ட, உளவியல் மற்றும் நிதி ஆலோசகர்களுடனான ஆன்லைன்  சந்திப்பிற்கு முன்பதிவு செய்து உதவியைப் பெறலாம்.

செயல்படும் விதம்:

1. மறுசீரமைக்கப்பட்ட PBSK அமைப்பானது AI போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவை வழங்கும் நிலையில், CGI துபாய் இணையதளத்தில் உள்ள சாட்போட் மற்றும் அறிவுத் தளம் போன்ற அம்சங்கள் பயனர்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான தகவல் மற்றும் பதில்களைக் கண்டறிய உதவும்.

2. விர்ச்சுவல் அசிஸ்டன்ட் (virtual assistant) சாட்போட் மூலம், பாஸ்போர்ட், அட்டஸ்டேஷன், தூதரகம், தொழிலாளர், விசா/OCI/துறப்பு, டிரேட், வணிகம் மற்றும் கல்வி போன்ற பிரிவுகளின் கீழ் தூதரகத்தால் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் பற்றிய விவரங்களைப் பெறலாம்.

3. இந்த அமைப்பு சட்ட, உளவியல் மற்றும் நிதி நிபுணர்களுடன் ஆலோசனை அமர்வுகளை முன்பதிவு செய்வதற்கான ஒரு வசதியான முறையை வழங்கும்.

4. இதன் மூலம் PBSK எதிர்காலத்தில் பதிவுகளை கண்காணிக்க முடியும் மற்றும் பயனர்களுக்கு சாட் அமர்வின் (Chat session) போது, டிரான்ஸ்கிரிப்டை இ-மெயில் மூலம் பெற உதவும். இ-மெயில் ஐடி இல்லாத தொழிலாளர்களுக்கு உதவ மொபைல் எண்ணை உள்ளிடுவதற்கான விருப்பமும் விரைவில் வழங்கப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.