ADVERTISEMENT

வெளிநாட்டில் இருந்து சவுதிக்கு வரும் ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டாயம்…SR100,000 வரை இழப்பு வழங்கப்படும் என அறிவிப்பு!!

Published: 28 Jul 2023, 2:42 PM |
Updated: 28 Jul 2023, 2:58 PM |
Posted By: admin

வெளிநாடுகளிலிருந்து சவுதி அரேபியாவிற்கு ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு காப்பீடு கொள்கை எனப்படும் இன்சூரன்ஸ் கட்டாயம் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இன்சூரன்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதையும், இந்த காப்பீட்டின் மூலம், SR100,000 வரை மக்கள் பயனடையலாம் என்பதையும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்த அமைச்சகத்தின் அறிக்கையில் நாட்டிற்கு வெளியே வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து யாத்ரீகர்களுக்கும் உம்ரா காப்பீட்டுக் கொள்கை ஒரு கட்டாய ஆவணம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இதற்கான கட்டணம் விசா கட்டணத்துடன் சேர்ந்து வசூலிக்கப்படும் என்றும், இதனை வைத்திருப்பவர்களுக்கு விரிவான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் கவரேஜைப் பொறுத்தவரை, கீழ்க்கண்ட 4 நிலைகளின் பொழுது காப்பீடாளர்கள் பயன்பெறுவார்கள், அவை அவசரகால சுகாதார பாதிப்புகள், அவசரகால COVID-19 பாதிப்புகள், பொது விபத்துக்கள் மற்றும் இறப்புகள், புறப்படும் விமானங்களை ரத்து செய்தல் அல்லது தாமதப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

ADVERTISEMENT

மேலும், ராஜ்ஜியத்திற்கு வெளியில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கான இந்த கட்டாய உம்ரா காப்பீட்டுக் கொள்கையின் பலன்கள் 100,000 ரியால்கள் வரை இருக்கும் என்றும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

அத்துடன், இந்த காப்பீடு கொள்கை குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் உள்ளூர் தொலைபேசி எண் : 8004400008, சர்வதேச தொலைபேசி எண்: 00966138129700 மற்றும் https://www.riaya-ksa.com என்ற இணையதளம் வழியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT